வரும் வெள்ளிக்கிழமை(19/2/2021) இப்படி குளித்தால் 7 வகையான பாவங்கள் நீங்கி நிறைய நன்மைகள் நடைபெறுமாம்!

sooriyan-erukkam-leaf

இந்த உலகத்தில் பாவம் செய்யாத மனிதனே இல்லை என்று கூறலாம். எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் பாவத்தை செய்து கொண்டு தான் இருக்கிறோம். கஷ்டம் என்ற ஒன்று வரும் போது தான் பாவத்தைப் போக்கிக் கொள்ள அதற்கான பரிகாரத்தையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். தெரிந்தே செய்த பாவங்களுக்கு இந்த உலகத்தில் மன்னிப்பு என்பது கிடையாது. ஆனால் தெரியாமல் எவ்வளவோ பாவங்கள் செய்து இருப்போம். அதற்கான தண்டனையையும் இந்த ஜென்மத்திலேயே நாம் அனுபவித்து படாதபாடுபட்டு கொண்டிருப்போம்.

Lord sooriyan

ரதசப்தமி நாளன்று சூரிய பகவானுக்கு வழிபடக்கூடிய மிகச் சிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை அன்று அதாவது பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு ரதசப்தமி தினம் வந்துள்ளது. இந்த தினத்தில் தான் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் சிறுகச் சிறுக தன் வெப்பத்தை அதிகரித்து, வடக்கு நோக்கிய திசையை பார்த்து 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் பயணிக்க செய்யும். அன்றைய நாள் நாம் நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் பெறுவதற்கு விரதம் இருந்து சூரியனுக்கு வழிபாடுகள் செய்யலாம். மேலும் ரத சப்தமி அன்று எருக்கம் இலையை வைத்து பாவம் போக்க குளியலும் செய்வது உண்டு. எருக்கம் இலையை ரதசப்தமி அன்று பயன்படுத்துவது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து பதிவை படியுங்கள்.

குருசேத்திரப் போரில் பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருக்கும் பொழுது அவருடைய உயிர் இன்னும் பிரியாததற்கு என்ன காரணம்? என்று வேத வியாசரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். துரியோதனனின் சபையில் பாஞ்சாலிக்கு நேர்ந்த அநீதியை தட்டிக் கேட்க அங்கிருந்த ஒருவரும் முன்வரவில்லை. அங்கு பீஷ்மரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

paanjali

கண் முன்னே அநியாயம் நடப்பதை கண்கள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தும், காதுகள் இருந்து கேட்டுக் கொண்டு, செயலற்று இருந்ததால் அவர் 7 வகையில் பாவம் செய்தவராக ஆகிவிட்டார். அதற்கான தண்டனையையும் அவர் இறுதி காலகட்டத்தில் அனுபவித்து ஆக வேண்டும் என்பது விதியாகும். இதற்காக பரிகாரம் தான் என்ன? என்று பீஷ்மர் கேட்க வியாசரும் ஒரு எருக்கம் செடியிலிருந்து ஏழு இலைகளை பறித்துக் கொண்டு வந்தார்.

- Advertisement -

அவற்றை தலையிலும், கண்களிலும், இரண்டு கால்களின் மீதும், புஜங்களின் மீது இரண்டையும் வைத்து விட்டார். சூரியனுக்கு நிகரான சக்தி இந்த எருக்கம் இலைகளுக்கு உண்டு. இதனுடைய வெப்பம் தாங்க முடியாமல் பீஷ்மர் உடைய உயிர் பிரியும் என்றும் அவர் கூறினார். அதனால் தான் எருக்கம் இலைகளை ரத சப்தமி அன்று விரதம் இருந்தாலும், இல்லை என்றாலும் குளிக்கும் பொழுது இப்படி பயன்படுத்தி குளித்து வர வேண்டும். இப்படி செய்தால் ஏழு வகையான பாவங்களும் நம்மிடம் இருந்து நீங்க பெருமாம்.

நீங்கள் குளிக்கும் பொழுது நன்கு கழுவி எடுக்கப்பட்ட ஏழு எருக்கம் இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஏழு எருக்கம் இலைகளை கவிழ்த்து தான் நம் உடம்பில் வைக்க வேண்டும். தலையில் ஒரு இலையும், இரண்டு இலைகள் கண்களுக்கும், இரண்டு இலைகளை கால்களுக்கும், இரண்டு இலைகளை தோல்களுக்கும் சிறிது நேரம் வைத்து எடுக்க வேண்டும். பின்னர் 7 இலைகளையும் ஒன்றாக சேர்த்து, ஆணாக இருப்பின் விபூதியை சிறிதளவை போட்டுக் கொள்ள வேண்டும். பெண்ணாக இருந்தால் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தலையில் கவிழ்த்து தண்ணீரை தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் நாம் அறியாமல் செய்த ஏழு வகையான பாவங்கள் நீங்கி நிறைய நன்மைகளை பெறுவோம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை பூஜையில் சம்பாதிக்கும் பணத்தை இப்படி வைத்தால் மட்டும் போதுமே?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.