அரசு வேலை யாருக்கு கிடைக்கும் அதற்கான பரிகாரங்கள் என்ன

Government job Mantra Tamil

“உத்தியோகம் புருஷ லட்சணம்” என்று அக்காலத்தில் ஆண்களுக்கு சொல்லப்பட்டாலும் இன்று ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவரும் பல்வேறு வேலைகளுக்கு சென்று பொருளீட்டுகின்றனர். எப்படிப்பட்ட வேலைக்கு சென்று எவ்வளவு பொருள் ஈட்டினாலும், “அரசாங்க உத்தியோகம்” என்றாலே மக்கள் எல்லோருக்குமே ஒரு தனி மரியாதை மற்றும் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த அரசு பணி கிடைப்பதற்கும் நவகிரகங்களின் அருள் இருக்க வேண்டும். இங்கு எந்தெந்த ராசியினருக்கு அரசு பணி கிடைக்கும் என்பதையும், எல்லா ராசியினருக்கு அரசு பணி கிடைப்பதற்கான பரிகாரங்களை குறித்தும் தெரிந்து கொள்வோம்.

Government Jobs

எல்லா ராசியினருக்கும் அவர்களின் ஜாதகத்தில் இருக்கின்ற கிரகங்களின் நிலை பொறுத்து அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், சூரியன், செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட ராசியான மேஷம், சிம்மம், விருச்சகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு மற்ற எல்லா ராசியினரை விட அரசாங்க பணி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களின் கருத்தாகும்.

ஜோதிட சாத்திரத்தின் படி “சூரியன், செவ்வாய், சனி” ஆகிய கிரகங்கள் “அரசு” கிரகங்களாகும். இந்த கிரகங்களின் ஆதிக்கம் அதிகம் கொண்ட “மேஷம் , சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம்” ராசியினருக்கு அரசு கிரகங்களின் அருள் முழுமையாக இருப்பதால், இவர்கள் அரசாங்கத்தில் ஊழியர்களாகவும், அதிகாரிகளாகவும் பணிபுரியும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. மேலும் இந்த ராசியினருக்கு இயற்கையிலேயே நிர்வாக மேலாண்மை, சரியான திட்டமிடல் போன்ற திறன்கள் அதிகம் இருப்பதை காண முடிகிறது.

இதனால் மற்ற ராசியினர் அரசாங்க உத்தியோகங்கங்கள் பெற முடியாது என்று அர்த்தமில்லை. நல்லொழுக்கங்களுடன் கூடிய வாழ்வை மேற்கொண்டு இறைவனின் மீது நம்பிக்கை வைத்து அரசு பணிகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு நிச்சயம் அரசு பணி கிடைக்கும். எல்லா ராசியினரும் அரசு பணி, பதவி உயர்வு பெற கீழே பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றை முழுமன ஈடுபாட்டுடன் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும்.

- Advertisement -

Lord sooriyan

பரிகாரம்:

தினமும் காலையில் எழுந்து குளித்து, சூரிய பகவானை நமஸ்கரித்து அவருக்குரிய மந்திரங்களை 10 முறை துதிக்க வேண்டும். ஞாயிற்று கிழமைகளில் நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு செந்தாமரை பூவை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் அரசு கிடைக்கும் யோகம் ஏற்படும்.

செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். இதனால் அரசு பணி வேண்டுபவர்களுக்கும், ஏற்கனவே அரசு பணியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகளும் கிடைக்கும் யோகம் உண்டாகும்.

சனி கிழமைகளில் சனி பகவானுக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வந்தாலும் அரசு உத்தியோகம் கிடைக்கும் அமைப்பு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசிப்படி எந்த கோவிலுக்கு சென்றால் நல்லது நடக்கும் தெரியுமா

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய எங்களுடன் இணைந்திருங்கள்