உங்கள் ராசிப்படி எந்த கோயிலிற்கு சென்றால் நல்லது நடக்கும் தெரியுமா ?

Astrology

நாம் அனைவருமே வாழ்வில் பல இன்பங்களை பெற்று இறுதியில் இறைவனை அடையவே பிறப்பெடுத்திருக்கிறோம். வாழ்வில் இன்பங்களை பெறுவதற்கு யோகம் ஏற்பட வேண்டும். அப்படி 12 ராசியினரும் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுவதால் அவர்கள் வாழ்வில் யோகம் ஏற்படும் என்பதை இங்கு அறிவோம்.

மேஷம்
Mesham Rasi
செவ்வாய் பகவானின் ராசியாக இந்த மேஷ ராசி இருக்கிறது. இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்படும் நன்மைகளுக்கு செவ்வாய் பகவானே அதிபதியாகிறார். எனவே இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் பல நன்மைகளும் யோகங்களும் கிடைக்க ஞாயிறு அல்லது செவ்வாய் கிழமைகளில் ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத ஸ்வாமியை வழிபட வேண்டும்.

ரிஷபம்
Rishabam Rasi
சுக்கிரனின் ராசியாக ரிஷப ராசி வருகிறது. இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் யோகங்களை பெற ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமியை வெள்ளிக்கிழமையன்று வழிபாடு செய்ய வேண்டும்.

மிதுனம்
midhunam
புதன் பகவானின் ராசியாக மிதுன ராசி வருகிறது. இந்த ராசியினருக்கு ஏற்படக்கூடிய நன்மைகளுக்கு புதன் பகவான் காரணமாகிறார். எனவே இந்த ராசியினர் தங்களுக்கான யோகங்களை பெற மதுரை மீனாட்சி அம்மனை புதன் கிழமை அன்று சென்று வழிபட வேண்டும்.

கடகம்
Kadagam Rasi
இந்த ராசியினரின் வாழ்வில் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் அதிபதியாக சந்திர பகவான் இருக்கிறார். இந்த ராசியினர் தங்கள் வாழ்வில் யோகங்களை பெறுவதற்கு திருப்பதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேச பெருமாளை, பௌர்ணமி அன்று வரும் திங்கட்கிழமையில் வழிபடுவது நன்மையை தரும்.

சிம்மம்
simmam
சூரிய பகவான் இந்த ராசியின் அதிபதியாக இருக்கிறார். இவர்களின் வாழ்வில் ஏற்படும் நன்மைகளுக்கு சூரியனே காரகனாகிறார். எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் சிறந்த யோகங்களை பெறுவதற்கு கும்பகோணத்திலிருக்கும் ஸ்ரீ சூரியனார் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சென்று வழிபட வேண்டும்.

- Advertisement -

கன்னி
Kanni Rasi
புதன் பகவானே இந்த ராசிக்கும் அதிபதி ஆவதால் இந்த ராசியினர் திருப்புளியங்குடி பெருமாள்
கோவிலுக்கு புதன் கிழமையன்று சென்று வழிபடுவதால், அவர்கள் வாழ்வில் பல யோகங்கள் மற்றும் நன்மைகள் ஏற்பட புதன் பகவான் அருள் புரிவார்.

துலாம்
Thulam Rasi
சுக்கிர பகவானின் ஆதிக்கம் கொண்ட ராசியாக இந்த துலாம் ராசி வருகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்குரிய யோகங்கள் மற்றும் நன்மைகளை பெற தூத்துக்குடியில் உள்ள தென் திருப்பேரை கோவிலுக்கு வெள்ளிக்கிழமையன்று சென்று வணங்க வேண்டும்.

விருச்சிகம்
Virichigam Rasi
செவ்வாய் பகவானே இந்த ராசியினரின் வாழ்விற்கு அதிபதியாகிறார். எனவே இந்த ராசியினர் செவ்வாய் கிழமையன்று திருச்செந்தூர் ஸ்ரீ செந்திலாண்டவரை வழிபட இவர்களின் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகள் மற்றும் யோகங்களையும் வழங்குவார் செவ்வாயின் அம்சம் கொண்ட முருகப்பெருமான்.

தனுசு
Dhanusu Rasi
குரு பகவான் இந்த ராசியினரின் வாழ்வை தீர்மானிக்கும் நாயகனாக இருக்கிறார். எனவே இந்த ராசியினர் தங்கள் வாழ்வில் உயரிய யோகங்களை பெற வியாழக்கிழமை அன்று ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

மகரம்
Magaram rasi
சனி பகவான் இந்த ராசிக்குரிய நாயகனாக இருக்கிறார். எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் சிறந்த நன்மைகள் மற்றும் யோகங்களை பெறுவதற்கு திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை செவ்வாய் அல்லது சனிக்கிழமையன்று சென்று வழிபட வேண்டும்.

கும்பம்
Kumbam Rasi
இந்த கும்ப ராசியும் சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் சனி கிழமையன்று காரைக்காலில் இருக்கும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவிலுக்கு சென்று வழிபட, சிறந்த நன்மைகள் மற்றும் யோகங்களும் ஏற்படும்.

மீனம்
Meenam Rasi
இந்த ராசிக்கும் அதிபதியாக குரு பகவானே இருக்கிறார். எனவே இந்த ராசியினர் தங்களுக்கு சிறந்த யோகப்பலன்களும் நன்மைகளும் ஏற்பட தூத்துக்குடியில் மாவட்டத்திலிருக்கும் இருக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருநகரி கோவிலுக்கு வியாழனன்று சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசிப்படி இதை செய்தால் அமோகமாக வாழலாம் தெரியுமா ?

இது போன்று மேலும் பல ஜோதிடம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்