பூஜையில் அர்ச்சிக்க சிறந்த பூவாக சாஸ்திரம் சொல்வது என்ன தெரியுமா? இந்த பூவால் மட்டும் அர்ச்சனை செய்தால் நீங்கள் வேண்டிய வேண்டுதல் உடனே நிறைவேறுமாம்!

archanai-flower-poo
- Advertisement -

கடவுளை வழிபடும் பொழுது பல்வேறு வழிகளை நாம் கடைப்பிடித்து வணங்கி வருகிறோம். சுவாமிக்கு பொட்டு வைப்பது முதல் அபிஷேகம் செய்வது வரை எல்லா விஷயங்களும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மற்றும் சாஸ்திர முறை படியும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் அர்ச்சனை செய்வதும் ஒன்றாக இருக்கிறது. பூக்களால், இலைகளால் இறைவனுக்கு அர்ச்சனை செய்தால் நம் வேண்டுதலை அவர் தட்டாமல் ஏற்றுக் கொள்வார் என்பது ஐதீகம். அப்படி இருக்க சாஸ்திர ரீதியாக எந்த பூ அர்சிக்க உகந்த மற்றும் சிறந்த பூவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது? அத்தகைய பூ என்ன பூ? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

இந்த உலகில் எத்தனை பூக்கள் இருந்தாலும், இந்த ஒரு பூவிவிற்கு மகத்துவமான தனித்துவம் உண்டு. இதன் வாசம் வித்தியாசமானது. இது எல்லோரையும் எவ்வளவு தூரம் இருந்தாலும் தன்பால் ஈர்த்துக் கொள்ளக்கூடிய அற்புதமான வாசம் வீசக்கூடியது. இந்த பூவால் இறைவனை தொழும் பொழுது, நம்முடைய வேண்டுதல்களை மெய்மறந்து அவர் ஏற்றுக் கொண்டு அருள் புரிவார் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -

சாஸ்திர குறிப்பு:
பில்வ பத்ர ஸஹஸ்ரபாத் ஹி வகுளம் புஷ்பம் உத்தமம்,
தஸ்மாத் வகுள புஷ்பாத் ஹி நந்தியாவர்த்தம் விஷிஷ்யதே!
நந்தியாவர்த்த ஸஹஸ்ரபாத் ஹி கரவீரம் விஷிஷ்யதே!
சர்வர் மநோரமை: புஷ்பை : ஜாதிபுஷ்பம் விஷிஷ்யதே!

பொருள் விளக்கம்:
வில்வ இலை மிக சிறந்த அர்ச்சனை பொருளாக பேசப்பட்டாலும், அந்த வில்வ இலைகளில் ஆயிரம் இலைகளை காட்டிலும் ஒரே ஒரு மகிழம்பூ சிறந்ததாக கருதப்படுகிறது. இத்தகைய போற்றுதலுக்கு உரிய மகிழம்பூ, ஆயிரம் இருந்தாலும் ஒரு நந்தியாவட்டை இருந்தால் அர்ச்சனை செய்ய அதைவிட சிறந்ததாக இருக்குமாம். நந்தியாவட்டை இத்தகு சிறப்புமிக்கதாக இருந்தாலும், ஆயிரம் நந்தியாவட்டையை காட்டிலும் ஒரு அரளிப்பூ விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. அரளிப் பூவுக்கு இருக்கும் இந்த மகத்துவத்தை விட, எல்லா பூக்களில் இருக்கும் சிறப்பம்சங்களை விட அர்சிக்க சிறந்த பூவாக ‘ஜாதி பூ’ இருப்பதாக இந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

எல்லா தெய்வங்களையும் அர்சிக்க ஏற்ற பூ ஜாதிப் பூ! இதன் வாசம் தெய்வீக அம்சமாக கருதப்படுகிறது. ஜாதி பூ வைத்தவுடன் சீக்கிரம் வாடி விடும் தன்மை கொண்டது ஆனால் அதுவரை அது தரக்கூடிய மணமானது நம்மை கடவுளின் பக்கம் ஈர்த்து கொடுக்கும் ஆற்றல் கொண்டது. சாஸ்திர குறிப்புகளில் தாமரை மற்றும் செண்பகப்பூ ஆகிய இரண்டு பூக்களை தவிர வேறு எந்த பூக்களையும் மொட்டாக இருக்கும் பொழுது அதை பயன்படுத்தி பூஜையில் அர்ச்சனை செய்யக்கூடாது.

அதே போல நீங்கள் பூஜையில் அர்ச்சனை செய்யும் பொழுது பூக்களை எக்காரணம் கொண்டு துண்டுகளாக கிள்ளி போடக்கூடாது. அர்ச்சனைக்கு உகந்த பூவானது முழுமையாக இருக்க வேண்டும். எனவே முழுமையான பூக்களால் அர்ச்சனை செய்வது ரொம்பவே சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி அல்லாமல் பூக்களை கசக்கியோ, வாடிய பூக்களையோ, காய்ந்து போன பூக்களையோ அல்லது கிள்ளியோ அர்சிக்க கூடாது. அர்சித்த பூக்களை ஒருபொழுதும் நீங்கள் குப்பையில் வீசக்கூடாது. இதை யாருடைய கால்களிலும் படாத நீர் நிலைகளில் விட்டு விடலாம் அல்லது செடிகளுக்கு அடியில் போட்டுவிட்டு வரலாம். மலர்கின்ற எந்த பூவும் இறைவனின் திருப்பாதங்களை சேர்வதில்லை. அப்படி சேரக்கூடிய இந்த அர்ச்சனை பூக்கள் விலைமதிக்க முடியாதது எனவே இதை அவமதிப்பவர்களுக்கு தோஷங்கள் ஏற்படுமாம். அதனால் அர்ச்சிக்கும் பூக்களை கவனமுடன் கையாளுவது நல்லது.

- Advertisement -