சனியின் பிடியில் இருப்பவரா நீங்கள்? அப்போ இத செய்ய மறக்காதீங்க.

sani-and-sivan
- Advertisement -

சனி பகவான் மிகவும் வலிமை வாய்ந்த கிரகமாக இருக்கிறார். பார்த்தவுடன் பிடித்து கொள்ளும் ஆற்றல் அவரிடம் உண்டு. அதனால் தான் சனி பகவானை வணங்கும் போது நேரெதிரே நிற்காமல் சாய்வாய் நின்று வணங்குவார்கள். சனியை “சாய்வாய் நின்று வழிபடு” என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளது இதனால் தான். அவர் மிகவும் உக்ரமானவர். ஆனால் தவறு செய்பவர்களுக்கு மட்டுமே கெடுதலை விளைவிப்பார். நல்லவர்களுக்கு அவரின் அருட்பார்வை எப்போதும் நல்லதே செய்யும். நீதிமானாக விளங்குபவர் நீதியை காக்க என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார். இரக்கமே படமாட்டார். எமலோகத்தில் நம்முடைய பாவ கணக்குகளை எழுதி கொண்டிருக்கும் சித்ரகுப்தரை விட சனி பகவான் பார்த்து கொண்டிருக்கும் பார்வை தான் தீர்க்கமாக இருக்கும். எள்ளளவும் எடை குறையாமல் இருக்கும். தன்னுடைய பெயர்ச்சியின் போது கடமையை செவ்வனே ஆற்றிவிடுவார்.

sani-baghavan

பாவங்களை செய்து விட்டு தப்பி செல்வதற்கு பரிகாரங்கள் தீர்வாகாது தான். ஆனால் அந்த பரிகாரத்தை செய்ய வைத்து உங்களுடைய தண்டனைகளில் இருந்து குறைத்து கொள்வதற்கு வழியை காட்டும் ஒரு பாதையாக பரிகாரங்கள் கட்டாயம் இருக்கும். இதை உங்களை செய்ய வைப்பதும் கூட அந்த இறைவனே ஆவார். நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனாக பரிகாரங்கள் செய்து முற்றிலும் இல்லாவிட்டாலும் கெடு பலன்களை குறைத்து கொள்ளலாம். ஆகவே சனி பகவானின் பிடியில் சிக்கி தவிப்பவர்களுக்கு என்ன செய்தால் அவரின் உக்ரத்தை குறைத்து உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்று இப்பதிவில் காணலாம்.

- Advertisement -

சனியின் நேர்மைக்கும், நீதி தவறாமல் கடமை ஆற்றும் பண்பிற்கும் தான் ஈசனே தம் பெயரை பட்டமாக அளித்து சனீஸ்வரன் என்று கௌரவப்படுத்தினார். அத்தகைய பெருமை வாய்ந்த சனி பகவானுக்கு மிகவும் பிடித்தவர் ஈசன். எம்பெருமான் மீது சனிக்கு அளப்பரிய பக்தி உள்ளது. எனவே சிவபெருமானுக்கு திங்கள் கிழமைகளில் காராம் பசுவின் பால் கொண்டு அபிஷேகம் மற்றும் வில்வ அர்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் சனியின் தாக்கம் குறையும்.

சிவனை குளிர்வித்தால் மட்டும் போதுமா? சனி பகவனையும் சேர்த்து கவர வேண்டும் அல்லவா? அப்போது தானே இரட்டிப்பு பலன் கிடைக்கும். ஆகவே சனி பகவான் சன்னதியில் சனிக்கிழமை தோறும் சென்று நல்ல தேங்காய் ஒன்றை வாங்கி உடைக்க வேண்டும். உடைத்த அந்த இரு முடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எள்ளு கொண்டு கருப்பு துணியில் முடிச்சி போட்டு விற்கப்படும் எள்ளு முடிச்சை நல்லெண்ணெயில் நனைத்து கொள்ள வேண்டும். அதன் திரியில் தீபம் ஏற்றி மனதார வழிபட வேண்டும். தீபம் ஏற்றும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்லது.

- Advertisement -

el deepam

சனி பகவான் ஸ்லோகம்:
நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:

முறையே இவ்வாறு 9 வாரம் வழிபட்டு வந்தால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். துன்பம் நீங்கி நிம்மதி கிடைக்க பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
வீட்டில் முறையாக அபிஷேகம் செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sani bhagavan manthiram Tamil. Sani bhagavan pariharam Tamil. Sani bhagavan valipadu Tamil. Sani bhagavan vakram Tamil.

- Advertisement -