வீட்டில் முறையாக அபிஷேகம் செய்வது எப்படி?

abishegam
- Advertisement -

நம்முடைய வீடுகளில் பெரும்பாலும்  இறைவனின் திருவுருவப் படத்தை வைத்து வழிபடும் முறையைத் தான் பின்பற்றி வருகின்றோம். ஆனால் சில பேர் வீடுகளில், சுவாமியின் திரு உருவச் சிலையை வைத்து வழிபடும் பழக்கத்தை மேற்கொண்டு வருகிறார்கள். பூஜை அறையில் சுவாமி படங்களை, பூஜைக்காக வைத்திருந்தால் அதை வாரந்தோறும் துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து சுலபமான முறையில் வழிபடுவோம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் சிலைகளை வைத்து வழிபடும் போது அதற்கான வழிபாட்டு முறைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். ஏனென்றால் சிற்பியிடம் இருக்கும் வரை தான் அது சிலை. நம் வீட்டிற்கு வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து, பூஜை அறையில் அமர வைத்து விட்டோமேயானால், தெய்வம் அந்த சிலையில் குடிகொண்டு விடும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே நம் வீட்டில் சிலை வைத்திருந்தோமேயானால் அதற்கு முறையான அபிஷேக ஆராதனைகளை கட்டாயம் செய்து தான்ஆக வேண்டும். வீட்டில் முறையான அபிஷேகம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

abishegam

உங்கள் வீட்டில் இருக்கும் எந்த சிலையாக இருந்தாலும் அதை எடுத்து ஒரு தாம்பூலத்தின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் அந்த சிலையை சுத்தமான தண்ணீர் விட்டு அதில் இருக்கும் பழைய மஞ்சள், குங்குமம் அனைத்தும் போகும்படி கழுவிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பால், தயிர், நெய், தேன், வாழைப்பழம் இந்த ஐந்து பொருட்களை வைத்து தான் அபிஷேகம் செய்யப் போகின்றோம். இந்த ஐந்து பொருட்களும் பஞ்ச பூதங்களுக்கு இணையாக கூறப்பட்டுள்ளது. முதலில் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பால் பஞ்சபூதங்களில் நீருக்கு இணையாக கூறப்பட்டிருக்கிறது. அதன்பின்பு தண்ணீர் ஊற்றி சிலையை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். (ஒவ்வொரு பொருள் அபிஷேகம் செய்து முடித்த பின்பும் நீரினால் சிலையை சுத்தம் செய்த பின்பே அடுத்த பொருளில் அபிஷேகம் செய்வது நல்லது.)

- Advertisement -

இரண்டாவதாக தயிர் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். தயிர் பஞ்சபூதங்களில் நிலத்துக்கு உரியதாக கூறப்படுகிறது. மூன்றாவதாக பஞ்சப் பஞ்சபூதங்களில் நெருப்பிற்கு உரியதாக கூறப்படும் நெய் அபிஷேகம் செய்ய வேண்டும். நான்காவதாக பஞ்ச பூதத்தில் ஆகாயத்திற்கு உரியதான தேன் அபிஷேகம் செய்யவேண்டும் ஐந்தாவதாக பஞ்ச பூதங்களில் காற்றுக்கு காற்றுக்கு உரியதாக கூறப்படும் வாழைப்பழத்தை பிசைந்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவேண்டும். (முடிந்தவர்கள் பலவகையான பழங்களை சேர்த்து, நாட்டு சர்க்கரை சேர்த்து பஞ்சாமிர்தம் போல் தயார் செய்து கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.) இறுதியாக சுத்தமான தண்ணீரில்  உங்களது சிலைகளை அபிஷேகம் செய்து, சுவாமியை துடைப்பதற்காக வைத்திருக்கும் நல்ல துணியால் சுவாமி சிலையை துடைத்துக் கொள்ளவேண்டும்.

abishegam2

வீட்டில் இருக்கும் சிலைக்கு முறையாக பூஜை செய்ய வேண்டுமென்றால் கட்டாயமாக மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஐந்து பொருட்களும் அவசியம் தேவை. இப்படித்தான் அபிஷேகம் செய்ய வேண்டும். இது தவிர முடிந்தவர்கள் மஞ்சள், சந்தனம், வாசனை திரவியமான பன்னீர் இப்படிப்பட்ட பொருட்களையும் வாங்கி அபிஷேகத்திற்காக பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. நீங்கள் அபிஷேகம் செய்யும்போது, எந்த தெய்வத்திற்கு அபிஷேகம் செய்கின்றீர்களோ அந்த தெய்வத்தின் நாமத்தை மனதார உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதாக இருந்தால் ‘ஓம் நமசிவாய’ என்று உச்சரிக்கலாம். விநாயகருக்கு அபிஷேகம் செய்வதாக இருந்தால் ‘ஓம் கணபதியே நம’ என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம். அபிஷேகம் முடிந்து சிலைகளுக்கு மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து, பூ வைத்து, சிலையை எடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, உங்களால் முடிந்த நெய்வேதியம் படைக்கப்பட்டு தீப, தூப, ஆராதனை காட்டி உங்களது பூஜையை நிறைவாக முடித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

abishegam1

தினம் தோறும் வீட்டில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது என்பது இந்த காலத்தில் சாத்தியமில்லை. முடிந்தவரை வாரம்தோறும் வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம் செய்யலாம். முடியாதவர்கள் மாதம்தோறும் வரும் பௌர்ணமி தினம், அமாவாசை தினம் இந்த இரண்டு தினங்களில் அபிஷேகம் மேற்கொள்ளலாம். இதைத் தவிர மற்ற விசேஷ தினங்களில் அபிஷேகம் செய்வதும் நல்ல பலனை தரும்.

மனதார நினைத்து அந்த இறைவனை வழிபடும்போது அறியாமல் நாம் செய்யும் சில தவறுகளை கூட அந்த இறைவன் மன்னித்து விடுவார். ஆனால் உங்கள் மனதளவில் எந்த ஒரு கெட்ட எண்ணங்களும் இருக்கக்கூடாது. கெட்ட எண்ணங்களோடு தங்கபஸ்மத்தால் பூஜை செய்தாலும் இறைவன் கட்டாயம் ஏற்றுக் கொள்ளமாட்டார். நல்ல எண்ணத்தோடு வெறும் தண்ணீரால் அபிஷேகம் செய்தால் கூட மனநிறைவோடு ஏற்றுக் கொள்வார் என்பது தான் உண்மை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
உங்கள் மனதில் ‘பூட்டி’ வைத்திருக்கும் பிரச்சனைகளை கூட, இந்தப் ‘பூட்டு’ பரிகாரம் சுலபமாக தீர்த்து விடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to do abhishekam at home. Abishegam. Abhishekam pooja. Abhishekam at home. Abishegam seiyum murai.

- Advertisement -