வெயிலும் இல்லாமல், செலவும் இல்லாமல் ஒரே பொருளை வைத்து 100 அப்பளம் வரை ரெடி பண்ணிடலாம் தெரியுமா?. வாங்க அது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த அப்பளம், வடகம் போன்றவற்றையெல்லாம் முன்பெல்லாம் வீட்டில் செய்து தான் சாப்பிடுவார்கள். இதற்காக ஊற வைத்து அரைத்து நல்ல வெயிலில் ஒரு நாள் முழுவதும் காய வைத்து எடுத்து, என இதன் வேலையை பெரிதாக நீண்டு கொண்டே செல்லும். அந்த காரணத்தினாலே இப்பொழுதெல்லாம் இதை யெல்லாம் வீட்டில் செய்வதே இல்லை. அதற்கான சூழ்நிலையும் இப்போது இல்லை. இந்த முறையில் மிகவும் சுலபமாக வெயிலில் காய வைக்காமல் குறைந்த செலவில் அதிக அப்பளங்களை நாமே தயாரிக்க முடியும் அது எப்படி என்று இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அப்பளம் செய்ய வெயில் தேவையில்லை என்பது தான் இதில் முக்கியமான ஒரு விஷயமே. இல்லை என்றால் இதை நல்ல வெயிலில் காய வைத்து அப்பளத்துடன் சேர்ந்து நாமும் காய்ந்து தான் தயாரிக்க வேண்டும். இந்த முறையில் செய்யும் போது சிரமமே இல்லாமல் சுலபமாக வீட்டின் உள்ளேயே ஜாலியாக பேன் காற்றில் அமர்ந்து கொண்டே செய்து விடலாம்.

- Advertisement -

இந்த அப்பளம் செய்ய முதல் நாள் இரவே கால் கிலோ பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அரிசியை கழுவிய பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை அரைத்த பிறகு மாவில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். தோசை மாவின் பதத்தை விட கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும்.

இந்த மாவை அரைத்து பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு சீரகம் சேர்த்துக் கொள்வது பிடிக்கவில்லை என்றால் அதற்கு பதில் கருப்பு எள்ளை சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த அப்பளம் செய்ய சின்ன சின்ன சில்வர் பாக்ஸ் மூடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மூடி சமமாக இருக்க வேண்டும். இந்த மூடியில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்த பிறகு அரைத்து வைத்த மாவிலிருந்து ஒவ்வொரு மூடிக்கும் 2 டேபிள் ஸ்பூன் மாவு எடுத்து ஊற்றி, ஆப்பத்திற்கு சுழற்றுவதைப் போல மூடியை சுழற்றினால் மாவு எல்லா பக்கமும் பரவி விடும். இதையே மூடி இல்லாமல் வாழை இலையில் செய்யலாம் ஆனால் மூடியில் செய்யும் போது சுலபமாக இருக்கும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து இட்லி பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைத்து விடுங்கள். தண்ணீர் கொதித்தவுடன் நீங்கள் ஊற்றி வைத்து மாவு மூடிகளை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக எடுத்து இட்லி தட்டின் மீது அடுக்கி விடுங்கள். பாத்திரத்தில் கொள்ளும் அளவிற்கு மாவு ஊற்றிய இந்த மூடிகளை வைத்து ஒரு அரை நிமிடம் வேக வைத்தாலே போதும் இந்த மாவு முழுவதும் நன்றாக வெந்து விடும்.

- Advertisement -

அதன் பிறகு மூடிகளை வெளியில் எடுத்து சூடு ஆறிய பிறகு ஒரு மெலிதான கத்தி அல்லது ஸ்பூன் வைத்து ஊற்றி இருக்கும் மாவை எடுத்தால் அப்படியே பேப்பர் போல உறிந்து வந்து விடும். இதை ஒரு தட்டிலோ அல்லது பிளாஸ்டிக் கவரிலோ போட்டு பேன் காற்றில் நான்கு மணி நேரம் ஆற வைத்து எடுத்தால் நல்ல கண்ணாடி போன்று மொறு மொறு அப்பளம் ரெடியாகி விடும்.

இதையும் படிக்கலாமே: 1 கப் அரிசி மாவு இருக்கா உங்க வீட்ல? இன்னைக்கு ராத்திரி இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க! வெறும் 15 நிமிடத்தில் இன்ஸ்டன்டான சுவை தரும் அடை தயார்.

இதை மிகவும் சுலபமாகவும் அதே நேரத்தில் செலவே இல்லாமல் செய்யக் கூடிய இந்த அப்பளத்தை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். குழந்தைகளுக்கு இது நல்ல ஸ்னாக்ஸ் ஆகவும் இருக்கும்.

- Advertisement -