1 கப் அரிசி மாவு இருக்கா உங்க வீட்ல? இன்னைக்கு ராத்திரி இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க! வெறும் 15 நிமிடத்தில் இன்ஸ்டன்டான சுவை தரும் அடை தயார்.

adai
- Advertisement -

இரவு என்ன சமைப்பது என்றே தெரியவில்லை‌. உடலும் ரொம்பவும் அசதியாக இருக்கிறது எனும்போது, 10 நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவை தரும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். இதை அடை என்று சொல்லலாம். ஆனியன் இன்ஸ்டன்ட் தோசை என்று கூட சொல்லலாம். பெயர் நம்முடைய விருப்பம் தான். ஆனால் மிக மிக எளிமையான முறையில் இந்த மாவை தயார் செய்து, சட்டென இந்த ரெசிபியை ரெடி பண்ணிடலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் சுவை தரும் இந்த டின்னர் ரெசிபி என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் 1 பெரிய சைஸ், பெரிய வெங்காயத்தை எடுத்து மெல்லிசாக நீள வாக்கில் வெட்டிக் கொள்ளுங்கள். அந்த வெங்காயத்தை எல்லாம் தனித்தனியாக உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். 1 கப் அரிசி மாவு பயன்படுத்த போகிறீர்கள் என்றால், அதே 1 கப் அளவு பெரிய வெங்காயமும் நமக்கு தேவைப்படும். (தேவையென்றால் 1 கப் அரிசி மாவுக்கு, 1 1/2 கப் அளவு வெங்காயம் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு கப்புக்கு கீழே வெங்காயம் பயன்படுத்தக்கூடாது. ரெசிபி சுவை இருக்காது).

- Advertisement -

ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் 1 கப், மிகப் பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் – 2, மிகப்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, மிகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு, இடித்த பூண்டு பல் – 4, எலுமிச்சம் பழச்சாறு – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், லவங்க பொடி – 2 சிட்டிகை, போட்டு இந்த பொருட்களை எல்லாம் முதலில் ஒன்றாக கலந்து விடுங்கள். (இலவங்கம் தூளாக இல்லை என்றால், ஒரு லவங்கத்தை நன்றாக இடித்து தூள் செய்து போட்டுக் கொள்ளுங்கள்.)

தேவையான அளவு உப்பு தூள் தூவி இதை கலக்கும் போது இதிலிருந்து லேசாக தண்ணீர் விடும். இறுதியாக 1 கப் – அளவு அரிசி மாவை இதில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் – சமையல் எண்ணெய் ஊற்றி மீண்டும் கலக்க வேண்டும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து இந்த மாவை பிசைந்தால், இந்த மாவில், இருக்கும் மற்ற எல்லா பொருட்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டி செட் ஆகி நமக்கு கிடைக்கும். மாவை எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீராக கரைக்கக் கூடாது.

- Advertisement -

அப்படியே இந்த கலவையை அள்ளி தோசை கல்லில் வட்ட வடிவில் பரப்பிவிட்டு எண்ணெய் விட்டு வேகவைத்து திருப்பிப்போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறம் வரும் படி சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான இரவு உணவு தயார். (அடை மாவு போல வார்த்து கூட இதை தேய்க முடியாது. அப்படியே கரண்டியில் எல்லா பொருட்களையும் எடுத்து கல்லில் பரப்பி விட வேண்டும்.) மேலே ஒரு மூடி போட்டு வேக வைக்கலாம்.

உங்கள் விருப்பம் போல இதற்கு என்ன சைட் டிஷ் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். டொமேட்டோ சாஸ் தொட்டு சாப்பிட்டாலும் சுவையாக தான். இருக்கும். எதுவுமே தொட்டு சாப்பிடவில்லை என்றாலும் சுவையாக தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீடே மணக்கும் இந்த சைவ குழம்பை ஒரு முறை செய்து சாப்ட்டு பாருங்க, கறி குழம்புக்கும் இதுக்கும் வித்தியாசாயமே தெரியாது. சூப்பரான அசைவ சுவையில் சைவ கறி குழம்பு செய்வது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

தேவைப்பட்டால் இந்த மாவை கல்லில் பரப்பிவிட்டு, இதன் மேலே சில்லி பிளக்ஸ் தூவலாம். அப்படி இல்லை என்றால் இட்லி பொடி தூவி சிவக்க விட்டு சாப்பிட்டால் இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம இன்னைக்கு ராத்திரியே முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் வீட்டில் இருப்பவர்கள் பாராட்டத்தான் செய்வார்கள்.

- Advertisement -