அரிசி மாவு சிப்ஸ் செய்முறை

rice flour chips
- Advertisement -

விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் இருக்கும் அனைத்து நாட்களிலும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்று ஏதாவது ஒரு பொருளை செய்து தர வேண்டிய சூழ்நிலையில்தான் இல்லத்தரசிகள் இருப்பார்கள். அப்படி வீட்டில் எதுவும் செய்து தர முடியாது என்னும் பட்சத்தில் கடைகளில் இருந்து ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய சிப்ஸை போலவே வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நம்மால் செய்ய முடியும்.

அதுவும் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சட்டென்று அப்படி செய்யக்கூடிய ஒரு எளிமையான சிப்ஸாக தான் அரிசி மாவு சிப்ஸ் இருக்கிறது. இந்த சிப்ஸை ஒருமுறை செய்து நீங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டாலேயே அது காலியாவதற்குள் மறுபடியும் திரும்ப வேண்டும் என்று கேட்பார்கள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட அரிசி மாவு சிப்ஸ் எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு – ஒரு கப்
  • தண்ணீர் – ஒரு கப்,
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • எள் – ஒரு டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் பொரிப்பதற்கு – தேவையான அளவு
  • பொடியாக நறுக்கிய கருவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கும் குறைவாக தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், கருவேப்பிலை, எள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதிக்க வேண்டும். பிறகு இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு இதில் நாம் எடுத்து வைத்திருக்கும் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலக்கும் பொழுது அடுப்பானது குறைந்த தீயில் இருக்க வேண்டும். மாவு கட்டி விழுகாத அளவிற்கு பிரட்டி விட வேண்டும். பிறகு இதை ஒரு மிக்ஸிங் பவுலில் மாற்றி மூடி போட்டு ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். இந்த சூட்டிற்கு அரிசி மாவு நன்றாக வெந்துவிடும். லேசாக மாவு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது கைகளில் தண்ணீரை தொட்டுக்கொண்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதை சப்பாத்தி தேய்ப்பது போல் சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் எண்ணெய் தடவிக் கொண்டு உருண்டையாக பிடித்து வைத்திருக்கும் இந்த மாவை தேய்த்துக் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு மெல்லியதாக தேய்க்க முடியுமோ அந்த அளவுக்கு மெல்லியதாக தேய்த்து விட்டு ஓரங்களை மட்டும் நீக்கிவிட வேண்டும். பிறகு கத்தியை வைத்து நமக்கு எந்த வடிவில் சிப்ஸ் தேவையோ அந்த வடிவில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

நறுக்கிய இந்த சிப்ஸை ஒரு தட்டில் எண்ணெயை தடவி அதில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே வைத்து விடாதீர்கள் ஒட்டிக்கொள்ளும். இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து சிப்ஸ் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதை குறைந்த தீயில் வைத்துவிட்டு நாம் தயார் செய்து வைத்திருக்கும் அரிசிமாவு சிப்ஸை எண்ணெயில் போட வேண்டும்.

- Advertisement -

இரண்டினை நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு கரண்டியை போட்டு பிரட்டி விடுங்கள். எண்ணையில் இந்த சிப்ஸை போட்டவுடன் கரண்டியை போட்டால் சிப்ஸ் உடைந்து விடும். சிப்ஸ் நன்றாக சிவந்து வெந்த பிறகு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது மேலும் அதற்கு சுவையூட்டும் வகையில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூளை சேர்த்து நன்றாக கலந்து குழந்தைகளுக்கு தரலாம். மிகவும் காரசாரமான சுவையில் இருக்கக்கூடிய அரிசி மாவு சிப்ஸ் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: பாசிப்பருப்பு பண் தோசை செய்முறை

கடைகளில் கிடைக்க கூடிய ஸ்நாக்ஸ் ஐட்டங்களை குழந்தைகளுக்கு தருவதற்கு பதிலாக இப்படி வீட்டிலேயே நாமே ஆரோக்கியமாக செய்து தரலாம்.

- Advertisement -