அரிசி பருப்பு எதுவுமே சேர்க்காமல் பத்து நிமிஷத்திலேயே சூப்பரான இன்ஸ்டன்ட் அடை செய்யலாம். அரிசி பருப்பு எதுவுமே இல்லாம எப்படின்னு யோசிக்கிறீர்களா, வாங்க அதையும் தெரிஞ்சுக்கலாம்.

adai recipe
- Advertisement -

இட்லி தோசை கூட நினைத்தவுடன் கடைகளில் விற்கும் மாவு பாக்கெட்களை வாங்கி செய்து சாப்பிட்டு கொள்ளலாம். ஆனால் இந்த அடையை பொருத்த வரையில் அப்படியெல்லாம் நினைத்தவுடன் சாப்பிட முடியாது. அரிசி, பருப்பு அனைத்தையும் ஊற வைத்து அரைத்தால் தான் அடை தயார் செய்ய முடியும். இந்த சமையல் குறிப்பு பதிவில் அரிசி பருப்பு எதையுமே சேர்க்காமல் இன்ஸ்டன்டாக அடை தோசை எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த அடை தோசை செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஐந்து சின்ன வெங்காயம் ஐந்து காய்ந்த மிளகாய் ஆறு பல் பூண்டு இவை எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அரைத்த இந்த விழுதுடன் ஒரு கப் ரவையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு வறுத்த ரவை வறுக்காத ரவை எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். ரவை சேர்த்த பிறகு மீண்டும் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது அதிக பைன் பவுடராக வராது. கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும்.

அரைத்த இந்த மாவை ஒரு பவுலில் சேர்த்தப் பிறகு ஒரு கப் ரவைக்கு, அரை கப் அரிசி மாவையும் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு கலந்து அரைகப் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து மூடி போட்டு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு கேரட், ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

பத்து நிமிடம் கழித்து கரைத்து வைத்த மாவில் அரிந்து வைத்த வெங்காயம், கேரட் எல்லாம் சேர்த்த பிறகு இன்னும் மாவு கெட்டியாகி விடும். அதனால் கொஞ்சம் தண்ணீர் மட்டும் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு இதை கரைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து காய்ந்தவுடன் இந்த மாவை எடுத்து உங்களுக்கு தோசையாக ஊற்ற வேண்டும் என்றாலும் எளிதாக ஊற்றிக் கொள்ளலாம். இது நாம் அடை மாவு பதத்திற்கு தயார் செய்திருப்பதால் கொஞ்சம் மாவை கெட்டியாக ஊற்றி எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய பிறகு ஒரு புறம் நன்கு சிவந்தவுடன், மறுப்புறம் திருப்பிப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மணக்க மணக்க சுவையான பீட்ரூட் பொரியல் இப்படி மட்டும் செஞ்சு கொடுத்தால் இனி யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டாங்க! பொரியல் சீக்ரெட் பொடி?

அரிசி பருப்பு எதையுமே ஊற வைக்காமல் அடை சாப்பிட வேண்டும் நினைத்த உடனே இன்ஸ்டன்டாக இருந்து அடை தோசையில் தயார் செய்து விடலாம். இதை கார சட்னி தக்காளி சட்னி போன்றவற்றுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -