Betroot poriyal : பீட்ரூட் பொரியல் இப்படி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்

beetroot-poriyal_tamil
- Advertisement -

பீட்ரூட் பொரியல் மட்டுமல்ல, இந்த சீக்ரெட் பொடி கேரட் பொரியல், பீன்ஸ் பொரியல் என்று எல்லா வகையான பொறியலுக்கும் சேர்த்தால் பொரியலின் ருசி அபாரமாக இருக்கும். வறுத்து அரைத்து பொடித்து வைத்துக் கொண்டால் தேவையான பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை வைத்து அருமையான மணக்க மணக்க சுவையான பீட்ரூட் பொரியல் ரெசிபி எப்படி தயாரிப்பது? என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

வறுத்து அரைக்க: சீரகம் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி விதை – 11/2 டீஸ்பூன், வேர்க்கடலை – கால் கப், கருவேப்பிலை – இரண்டு கொத்து. தாளிக்க: சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வரப்பளகாய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், துருவிய தேங்காய் – அரை கப், பீட்ரூட் – 300g.

- Advertisement -

செய்முறை

பீட்ரூட் பொரியல் செய்வதற்கு முதலில் தேவையான அளவிற்கு பீட்ரூட்டை தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா வகையான பொறியலுக்கும் இந்த வறுத்து அரைக்க கூடிய பொடியை சேர்த்தால் ரொம்பவே சூப்பராக இருக்கும்.

வறுத்து அரைக்க ஒரு பேனில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் தனியா சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் வதக்கிய பின்பு காய்ந்த வேர்க்கடலை கால் கப் அளவிற்கு சேர்த்து, 2 கொத்து கறிவேப்பிலையை உருவி போட்டு ரெண்டு நிமிடங்களில் லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை அணைத்து நன்கு ஆறிய உடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் போல அரைத்து எடுத்து வாருங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு வரமிளகாயை காம்பு நீக்கி இரண்டாக உடைத்து சேருங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு, ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பாதி அளவிற்கு நன்கு வதங்கியதும், நீங்கள் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்க்க வேண்டும். பீட்ரூட்டை துருவி சேர்த்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
பிரண்டையுடன் இதையும் சேர்த்து அரைத்து பாருங்க. பிரண்டையே பிடிக்காது என்பவர்கள் கூட இந்த முறையில் செய்யும் போது கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இப்படி வாரம் ஒரு முறை அரைத்து சாப்பிட்டு பாருங்க எலும்பு பிரச்சனை கிட்ட கூட வராது.

பீட்ரூட் பாதி அளவிற்கு வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து இரண்டு டீஸ்பூன் தூவி நன்கு கலந்து விட்டு, கொஞ்சம் போல தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடம் ஆவியிலேயே மூடிவிட்டு வேக விடுங்கள். சிறிது நேரத்தில் பீட்ரூட் நன்கு வெந்து தண்ணீர் வற்றி வந்திருக்கும், இந்த சமயத்தில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். அவ்வளவுதான், மணக்க மணக்க சூப்பரான இந்த பீட்ரூட் பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள், விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -