சமையல் அறையில் அரிசியை இப்படி வைத்தால், வீட்டில் உள்ள கஷ்டம், கடன், கவலை அத்தனைத்தும் காணாமல் போகும். அரிசி மூட்டை போல, வீட்டில் பண மூட்டையும் இருக்கும்.

rice

நம்முடைய சமையலறையில் இருக்கும் அரிசி மூட்டையை போல, நம் வீட்டில் பணமும் முட்டையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நினைக்கும் போதே கண்களின் முன் பணமூட்டை தெரிகிறதா? நமக்கு பேராசை எதற்கு? நம் வீட்டில் இருக்கும் பணக் கஷ்டம் தீர, கடன் சுமை நீங்கி, நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பணம் இருந்தால் போதும். மன நிம்மதியோடு வாழலாம். வீட்டில் இருக்கும் பணப் பிரச்சினை நீங்க சமையலறையில் இருக்கும் அரிசியை எப்படி வைக்க வேண்டும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

rice1

அந்த காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்களில் இதுவும் ஒன்று. காலப்போக்கில் இதுவும் நவநாகரீக மாற்றத்தில் மாறிவிட்டது. அந்தப் பழைய முறையைப் பின்பற்றி நம்முடைய வீட்டில் இழந்த செல்வங்களை எப்படி மீட்டெடுக்கலாம்? கொஞ்சம் கூட தாமதம் செய்யாமல் பதிவுக்கு செல்லலாம்.

முதலில் நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய அரிசியை இப்போது பிளாஸ்டிக் டப்பாக்களில், சில்வர் ட்ரம்மிலும் கொட்டி சேமித்து வைக்கின்றோம். ஆனால் அரிசியை மண்பானையில் கொட்டி சேமித்து வைத்தால் வீட்டில் லட்சுமி கடாட்சத்திற்கு குறைவே இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் அரிசியை மண்பாண்டங்களில் தான் கொட்டி வைத்து புழங்கி வந்தார்கள்.

clay-pot

இதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய வீட்டில் இருக்கும் பணம் நகை இவைகளை அரிசியில் ஒளித்து வைக்கும் பழக்கத்தையும் வைத்துள்ளார்கள். அது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ராசியையும் தந்தது. அதிர்ஷ்டமும் ராசியும் ஒரு பக்கம் இருக்க, அந்த காலத்தில் வீட்டிற்கு திருட வரும் திருடர்கள் அரிசி பானையில் கையை வைத்து திருட மாட்டார்கள். எந்த வீட்டில் திருடச் என்றாலும் அரிசி பானையில் கையை வைக்க கூடாது என்பது அந்த கால திருடர்களில் நியதியாக இருந்தது. திருட்டில் கூட உண்மையும் நீதியும் கடைப்பிடித்து வந்த காலம், அந்த காலம்.

- Advertisement -

சரி, இப்போது நம்முடைய விஷயத்திற்கு வருவோம். தற்சமயம் மண்பாண்டங்களை வீட்டில் வாங்கி வைத்து அதில் அரிசியைக் கொட்டி சேமித்து வைக்கும் சூழ்நிலை நம்மிடத்தில் இல்லை. இருப்பினும் சிறிய அளவில் ஒரு மண்பானையை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சமையல் அறையில் எப்போதும் அந்த மண் பானையில் அரிசி நிறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

clay-pot1

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு ரூபாய் நாணயத்தை அந்த அரசி பானையில் போட்டு புதைத்து வைக்கலாம். கூடவே உங்களுடைய வீட்டில் குண்டுமணி தங்கம் இருந்தாலும் அதில் ஒன்றை எடுத்து அரிசியலில் புதைத்து வையுங்கள்.

clay-pot2

பானையில் வைத்த நகையை அடுத்த வாரம் எடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ரூபாய் நாணயத்தை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தலாம். இப்படியாக தொடர்ந்து வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அரிசி பானையை மகாலட்சுமியாக பாவித்து அரசி பானையில் இந்த இரண்டு பொருட்களை வைத்து வந்தால் நிச்சயமாக வீட்டில் இருக்கும் பண கஷ்டம் தீரும். வறுமை நீங்கும். மகாலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். தேவைக்கு ஏற்ப பணப்புழக்கம் இருந்து கொண்டே வரும். முயற்சி செய்து பாருங்கள்.