ஞாபக மறதி நீங்க இதை செய்தாலே போதும்

niybaga-sakthi-athikarikka

“ஞாபக மறதி” என்பது ஒரு காலத்தில் 60, 70 வயதைக் கடந்தவர்களுக்கே வரக்கூடிய ஒரு குறைபாடாக இருந்தது ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறை தரும் அழுத்தத்தினால் இளம் வயதினருக்கு கூட இத்தகைய குறைபாடு ஏற்படுகிறது. அதை போக்குவதற்கான முத்திரை தான் இந்த “அர்த்த ஞான” முத்திரை. இம்முத்திரையை செய்யும் முறை பற்றி இங்கு காண்போம்.

Artha nyana muthirai

முத்திரை செய்யும் முறை:
நீங்கள் முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் வளையாமல், நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். இப்போது உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் இரு கைகளிலும் உள்ள ஆட்காட்டிவிரல்களை உங்கள் கட்டைவிரல்களின் முதல் கணுப்பகுதியை மேலே உள்ள படத்தில் காட்டியபடி தொட்டுக்கொண்டிருக்குமாறு வைத்து கொள்ளுங்கள். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

பிறகு உங்கள் இரு கண்களையும் மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் ஒரு சீரான வரிசையில் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலை மாலை என்ற இரு வேளையும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்து வர வேண்டும்.

yoga

பலன்கள்:

- Advertisement -

இம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் உங்கள் மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று உங்கள் ஞாபகத் திறன் அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை சீராகும். மனபதட்டங்கள் நீங்கி மனம் அமைதி பெரும் உடலிலுள்ள கழிவுகளை சுவாசக்காற்றின் வழியே வெளியேற்றும்.

இதையும் படிக்கலாமே:
பல் வலி குணமாக இந்த முத்திரை செய்தால் போதும்

இது போன்ற மேலும் பல யோக முத்திரைகள், நோய் தீர்க்கும் முத்திரைகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we discussed about Artha nyana Mudra in Tamil. So by doing this Mudra yoga one can increase his memory power. So it is the best memory power tips in Tamil.