வருகின்ற ஜனவரி 10, 2020 இல் திருவாதிரைத் திருவிழா ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

aaruthra-dharsan

சென்ற ஜனவரி 1 முதல் சிதம்பரம் மற்றும் உத்திரகோசமங்கை திருத்தலங்களில் திருவாதிரைத் திருவிழா உற்சவங்கள் நடைபெற்று வருகின்றது. பத்து நாட்கள் வரை வெகு விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாக வருகின்ற ஜனவரி 10 இல் நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனம் வழங்க உள்ளார். பல இடங்களில் இருந்தும் இந்த காட்சியை காண திரளான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

chidhambaram-thiruvadhirai

ஒரு முறை தில்லையில் ஈசனிடம் பேரன்பு கொண்ட பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத முனிவரும் சிவபெருமானின் நடனத்தை காண ஆவல் கொண்டனர். அவர்களின் அன்பிற்கிணங்கி ஈசப்பெருமான் திருநடனம் புரிந்தார். இந்த நிகழ்வை தான் ஆருத்ரா தரிசனமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

இதனை கொண்டாடும் விதமாக சிவ பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய சிதம்பரம் கனகசபையிலும், ஊர்த்துவத் தாண்டவமாடிய திருஆலங்காடு ரத்தின சபையிலும், பாண்டிய மன்னனுக்காக இடக்கால் மாறி ஆடிய மதுரை திருஆலவாய் வெள்ளிசபையிலும், திருநெல்வேலியிலுள்ள தாமிர சபையிலும், குற்றாலத்திலுள்ள சித்திர சபையிலும் இந்த நன்னாளில் ஆருத்ரா அபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் விமரிசையாக நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. பெரும்பாலான சிவாலயங்களில் லிங்கமாக காணப்படுகின்ற ஈசன் இது போன்ற சில தளங்களில் நடராஜராக காட்சி தருகிறார். இவ்வாறு காட்சி தருகின்ற நடராஜ பெருமானுக்கு ஆண்டில் 6 முறை மட்டுமே அபிஷேக, அலங்காரங்கள் நிகழ்த்தபடுவது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்நிகழ்வானது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

Chithambaram natarajar

தில்லையில் வருகின்ற ஜனவரி 8 இல் தங்க தேரிலும், 9 இல் ரத உற்சவமும் கொண்டாடப்படும். அதே போல் ஜனவரி 10 ஆம் நாளில் திருவாதிரை நட்சத்திரம் பிற்பகல் 3.32 வரை நீடிப்பதால் அதிகாலை 3.30 மணி அளவில் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் 12.00 மணி அளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

- Advertisement -

ராமநாதபுரம் அருகே அமைந்துள்ள உத்திரகோசமங்கை தளத்தில் இருக்கும் நடராஜர் ஆறு அடி உயரம் கொண்ட மரகத கல்லால் ஆனவர். ஆண்டு முழுவதும் சந்தான காப்பு பூசப்பட்டிருக்கும். திருவாதிரை நாளில் தான் அந்த சந்தான காப்பு களையப்பட்டு மரகத நடராஜராக காட்சி அளிப்பார். ஆருத்ரா தரிசனம் முடிந்ததும் மீண்டும் சந்தன காப்பு பூசபட்டு விடும். இந்த வருடம் மரகத நடராஜருக்கு வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் சாத்தப்பட்டிருக்கும் சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அபிஷேகமும், ஜனவரி 10ம் தேதி காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

maragatha-natarajar

ஆருத்ரா தரிசன காட்சியை காண்பதற்கு கண்கள் கோடி வேண்டும். அவ்வளவு அற்புதமாக இருக்கும். பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் பிறவா பயனை அடையலாம். அறியாமல் ஆற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Aaruthra dharisanam 2020. Thiruvathirai 2020 in Tamil. Margazhi thiruvathirai 2020. Arudra darshan chidambaram 2020. Thiruvathira thirunal in Tamil.