வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா?

varahi

அந்த அம்பாளின் பலவகையான ரூபங்களில் ஒன்றுதான் இந்த வாராஹி அம்மன். பல வகையான அம்மன் படங்களை நம் வீட்டில் வைத்து வழிபட்டாலும் வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்று வரை இருந்து தான் வருகிறது. இதற்கு வாராகி அம்மனின் விசித்திரமான தோற்றமும், அவள் காளியின் சொரூபம் என்பதினாலும் தான். தவறு செய்பவர்கள் தான் இந்த வாராஹி அம்மனை பார்த்து பயப்பட வேண்டும். ஏனென்றால் முனிவர்களை வாட்டி வதக்கிய அசுரர்களை அழித்தவர் தான் வராகி அம்மன். தவறு செய்யாதவர்களுக்கு வரங்களை அள்ளித் தருபவள் இந்த வாராஹி. வாராஹி அம்மனின் சிறப்புகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

இந்த வாராகி அம்மனின் தோற்றமானது பன்றி உருவத்தில் இருக்கும். எட்டு கைகளைக் கொண்ட வாராஹி அம்மன் சங்கு, சக்கரம், படி, கலப்பை இவற்றை தன் கைகளில் வைத்துள்ளார்கள். வாராஹி அம்மன் விவசாயிகளின் கடவுளாக இருக்கின்றார். விவசாயிகள் விதைக்கும் பயிரானது செழிப்பாக வளர வேண்டும், நல்ல லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் வாராஹி அம்மனை வழிபடலாம்.

வாராஹி அம்மன் அந்த மகாலட்சுமியின் அம்சம் என்றும் கூறுவார்கள். மகாலட்சுமிக்கு எப்படி சிவப்புத் தாமரை மிகவும் சிறப்பானது, அதே போலதான் வாராஹி அம்மனுக்கு சிகப்பு தாமரை என்பது மிகவும் உகந்தது.

varahi

பெருமாள் எடுத்த அவதாரங்களில் வராஹ மூர்தி அவதாரமும் ஒன்று. வராஹ மூர்தி அவதாரத்தில் பெருமாளுக்கு துணையாக இருந்தவள் இந்த வராஹி அம்மன். அந்தப் பெருமாள் வாராஹ அவதாரம் எடுத்தபோது, பெருமாளுக்கு உதவியாக இருந்தார் இந்த வாராஹி அம்மன். ஒரு வரலாற்று கதையின் மூலம் வாராஹியின் மகிமையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பெருமாள் வராஹ மூர்த்தி அவதாரம் எடுத்தபோது இந்த பூமி நீரில் மூழ்கும் அவல நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் வராஹ மூர்த்தி அவதாரத்தை கொண்டு, பன்றி ரூபத்தில் இருந்த பெருமாள் தன் மூக்கினால் இந்த பூமியை தூக்கி நிறுத்தி காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. ஏனென்றால் பன்றியால் மேலே கழுத்தைத் தூக்கி பார்க்க முடியாது.

Varahi amman

அந்த சமயத்தில் வாராஹி அம்மன், பெருமாளுக்கு சக்தியை கொடுத்து தன் மூக்கில் இந்த பூமியை தூக்கி நிறுத்தும் பலத்தை கொடுத்ததாக புராணங்கள் கூறுகிறது. இதற்கு சாட்சியாக பூமியை தன் மூக்கில் தாங்கி நிற்கும் வராகமூர்த்தி படங்களை நாம் கண்டிருப்போம்.

எவரையும் ஆபத்திலிருந்து காக்கும் சக்தியானது இந்த வாராஹி அம்மனுக்கு உள்ளது என்பதை இந்த கதையின் மூலமாகவே நாம் உணரலாம். அதுமட்டுமல்ல நம் குடும்பத்தில் எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகள் இருந்தாலும் அதனை தீர்த்து வைக்கும் சக்தியானது இந்த வாராஹி அம்மனுக்கு உண்டு.

Varahi amman

வாராஹி அம்மனை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் இனி யாருக்கும் வேண்டாம். அந்த வாராஹி அம்மனை தாராளமாக நம் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். நமக்கு நன்மையே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் செய்யப்படும் எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் அதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே
எவ்வளவு முயற்சி செய்தாலும் கடன் கிடைக்கவில்லையா? இந்த பொருளை எடுத்துச் சென்றால் போதும்.

English Overview:
Here we have Varahi amman vazhipadu in Tamil. Varahi amman poojai in Tamil. Varahi amman pooja at home. Varahi vazhipadu at home.