இன்று சிவன் கோயிலிற்கு சென்றால் பன் மடங்கு அருளை பெறலாம்

மார்கழி மாதம் தான் தேவர்களுக்கு விடியற்காலை பொழுது என்பதால் அவர்கள் மகாதேவரை தரிக்க அந்த மாதத்தில் வருவது வழக்கம். மக்களை பொறுத்தவரை மார்கழி மாதம் என்பது இறைவழிபாட்டிற்கு மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரமானது சிவபெருமானை வழிப்பட மிக சிறந்த நாளாகும்.

uthirakosamangai

பொதுவாக திருவாதிரை நட்சத்திரம் பெருமாளுக்கு உகந்த நட்சத்திரம். ஆனால் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரமானது சிவனுக்கு உகந்தது என்பதால் சிவன் பெருமாள் ஆகிய இருவரின் சக்தி பெற்ற நாளாக விளங்குகிறது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள். வருடம் தோறும் இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடப்பது வழக்கம். இந்நாளில் நாம் சிவன் கோயிலிற்கு சென்றால் பன் மடங்கு அருளை பெறலாம் என்பது நியதி.

“கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்க சிவபெருமான் நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள் தான் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளாகும். நடராஜரின் அற்புத அழகை இன்று காணும் அனைவரும் ஆ… ருத்ரா என்று அசந்து போய் நிற்கும் அளவிற்கு அவர் அற்புதமாக காட்சி தருவார்.

chidhambaram natarajar

அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா என்பது சிறப்பாக கொண்டாடப்படும் என்றாலும் உத்திரகோசமங்கை, சிதம்பரம் நடராஜர் கோவில், தஞ்சை பெரிய கோவில் போன்ற சிவாலயங்களில் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நாளில் உளுந்து மாவினால் செய்த களியை இறைவனுக்கு நெய்வேத்தியமாகப் படைத்தது பின் அனைவருக்கும் வழங்குவது வழக்கம். ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ‘ என்று பெரியோர்கள் கூறுவதும் இதனால் தான்.

chidhambaram natarajar

இதையும் படிக்கலாமே:
விபூதி யாரால் எப்படி தோன்றியது தெரியுமா ?

இன்று சிவன் கோயிலிற்கு சென்று சிவனை வெறுமனே தரிசித்தாலே போதும் நாம் பல அறிய பலன்களை பெற்றுவிடலாம். ஆகையால் நீங்களும் இந்த நன்னாளில் சிவ தரிசனம் பெற்று அருள்மழையில் நனைய வேண்டுகிறோம்.