- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி வழிபாடு

ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி வழிபாடு

- Advertisement -

அம்பிகையை ஒன்பது விதமான வடிவங்களில் வழிபடுவது நவராத்திரி வழிபாடாகும். ஒரு வருடத்தில் நான்கு வகையான நவராத்திரிகள் கொண்டாடப்படுவது வழக்கம். அவை ஆஷாட நவராத்திரி, சியாமள நவராத்திரி, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி என நான்கு வகையான நவராத்திரிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவற்றில் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே பெரும்பாலானவர்கள் கொண்டாடுவதாகும். மற்ற மூன்று நவராத்திரிகள் பற்றி பல பேர் அறிந்திருப்பது இல்லை. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஆஷாட நவராத்திரி பஞ்சமி திதியில் வராஹி அம்மனை வழிபடும் முறையை பற்றி பார்ப்போம்

ஆனி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரியே வாராகி வழிபாட்டிற்குரிய விழாவாக தென் மாநிலத்திலும் துர்க்கை வழிபாட்டுக்குரிய விழாவாக வட மாநிலத்திலும் மக்கள் கொண்டாடுகின்றன. இதனை ஆஷாட நவராத்திரி என்று வடமாநிலங்களில் குறிப்பிடுகிறார்கள். உலகத்தை காக்கும் அன்னையான பராசக்தியை போற்றும் விதமாக இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது. வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரியை சாகம்பரி நவராத்திரி அல்லது காயத்ரி நவராத்திரி என்றும் சொல்வதுண்டு. வாராகி ஆஷாட நவராத்திரி ஜூலை 6ஆம் தேதி 2024 சனிக்கிழமை அன்று தொடங்கி ஜூலை 15ஆம் தேதி முடிவடைகிறது. நவராத்திரி என்பது ஒன்பது இரவுகள் அன்னை வாராஹியின் 9 வடிவங்களை வழிபடும் நாட்களை குறிப்பதாகும்.

- Advertisement -

அன்னை வாராஹி தேவிக்கு தானிய கோலம் இட்டு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இல்லத்தில் பஞ்சமி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி சிறிய கோலமிட்டு அதை தானியங்கள் கொண்டு அலங்கரித்து அன்னை வாராகியை வழிபாடு செய்தால் இல்லத்தில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். இந்த வருஷத்துக்கான ஆஷாட நவராத்திரி தினத்தில் அனைவரும் அவரவர் வீட்டில் விளக்கேற்றி 12 நாமங்களைச் சொல்லி வாராகி தேவியை வழிபாடு செய்யுங்கள். இதனால் நம்மை பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாம் நீங்க இன்பங்கள் பெருகட்டும் என்று மனமாற வேண்டிக் கொள்ளுங்கள்.

12 நாமங்கள்:

- Advertisement -

பஞ்சமி
தண்டனாதா
சங்கேதா
சமயேஸ்வரி
சமய சங்கேதா
வாராகி
போத்திரினி
சிவா
வார்த்தாலி
மகாசேனா
ஆக்ஞா சக்ரேஸ்வரி
அரிக்ஞை

இந்த 12 நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி திதி அன்றும் அன்னையின் சந்நிதி அல்லது நம் இல்லத்தில் நம்பிக்கையுடன் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வாராஹி அம்மன். அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் நமக்கு சாதகமாகும். உங்கள் இல்லங்களில் வாராகி நவராத்திரி பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் தினசரி அல்லது இந்த ஒன்பது நாட்களில் உங்களால் முடிந்த போது அருகில் இருக்கும் அம்மன் கோவில் அல்லது வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று மனதார அம்பாளை வேண்டிக் கொண்டால் அதிர்ஷ்டமும் விருப்பமும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

- Advertisement -

பூண்டு கலந்த தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த தயிர் சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சக்கரை வள்ளி கிழங்கு, தேன் இவை அனைத்தும் அன்னைக்கு பிரியமானவை என சொல்லப்படுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றையும் அல்லது உங்களால் முடிந்தால் இவை அனைத்தையும் படைத்து மற்றவர்களுக்கும் விநியோகித்து வாராகியை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும். வாராகி வழிபட உகந்த நாள் பஞ்சமி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி அன்று வழிபட உகந்த தினம் என்றாலும் ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய பஞ்சமி திதியில் வழிபாடு செய்தால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

வாராகி உரிய அர்ச்சனை மந்திரங்களில் “ஆஷாட பஞ்சமி பூஜனப்ரியாயை நமஹ” என்ற ஒரு வரி வரும். ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையை பிரியமுடன் ஏற்பவள் அன்னை தான் என்பது இதன் பொருள்.

இதையும் படிக்கலாமே செல்வ வளம் அதிகரிக்க தீபம் ஏற்றும் முறை

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் பஞ்சமி திதி அன்றாவது வாராகி அம்மனை முழு நம்பிக்கையுடன் வழிபட்டு தங்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து கஷ்டங்களையும் நீக்கி நலமுடன் வாழலாம்.

சற்று முன்