அனைத்து இல்லங்களிலும் ஏதாவது ஒரு நாளாவது தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கும். தீபத்திற்கு இணையான சக்தி என்பது வேறு எதுவுமே இல்லை என்று கூட கூறலாம். ஆலயமாக இருந்தாலும் இல்லமாக இருந்தாலும் தீபம் ஏற்றாமல் எந்த தெய்வ வழிபாட்டையும் நம்மால் மேற்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட தீபத்தை சிலர் தினமும் வீட்டில் ஏற்றி வழிபட்டாலும் அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஒவ்வொரு நாளும் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கையில் செல்வ வளம் அதிகரிக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக தீபமேற்றி வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியதற்குரிய காரணத்தை தெரிந்து கொள்வோம். தீபம் எரியும் வடிவமானது சிவபெருமானையும், அந்த தீபத்திலிருந்து வெளிப்படும் வெப்பமானது பார்வதி தேவியையும், அந்த தீபம் எரிவதற்குரிய எண்ணெய் திரியானது விநாயகப் பெருமானையும், அந்த தீபத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சமானது முருகப்பெருமானையும் குறிப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஒரு வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் இவர்கள் அனைவரின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபம் ஏற்றுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் மாலையில் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது முக்கியம். திங்கட்கிழமை என்பது சந்திர பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. அன்றைய தினத்தில் ஒரு தாம்பாளத்தை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் அகல் விளக்கு வைத்து விளக்கெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் சந்திர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதனால் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெளிவான அறிவு கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை அன்று நாம் தீபம் ஏற்றும் பொழுது நம் வீட்டு மனையில் இருக்கக்கூடிய ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்து அதில் சிறிது மஞ்சளை கலந்து தட்டில் வைத்து அந்த மண்ணிற்கும் மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருள் நமக்கு கிடைக்கும். செவ்வாய் பகவானின் அருள் கிடைத்தால் கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
புதன்கிழமை அன்று அரச இலை, வேப்ப இலை, ஆலமர இலை போன்ற தெய்வ சக்தி மிகுந்த இலைகளை தாம்பாளத்தில் வைத்து அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றுவதன் மூலம் புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து ஞானம் என்பது அதிகரிக்கும்.
வியாழக்கிழமை அன்று வாழை மட்டையை வைத்து அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றுவதன் மூலம் குரு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து வீட்டில் மங்கல காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.
வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருக்கக் கூடிய நாணயங்களை ஒரு தட்டில் வைத்து அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றுவதன் மூலம் சுக்கிர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
சனிக்கிழமை அன்று வீட்டில் சமைத்த சாதம் எச்சில் படாமல் எடுத்து உருண்டையாக பிடித்து வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றுவதன் மூலம் சனி பகவானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். மேலும் முன்னோர்களின் அருளும் பரிபூரணமாக கிடைத்து நாம் செய்த பாவங்கள் நீங்கும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று நவ தானியங்களை தட்டில் பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றுவதன் மூலம் சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் நவகிரகங்களின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.
இதையும் படிக்கலாமே கோடி பணத்தை கொட்டி தரும் பரிகாரங்கள்
இந்த எளிமையான வழிமுறைகளை முழு நம்பிக்கையுடன் பின்பற்றி தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் செல்வ செழிப்பு உயரும்.