வராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக திகழக்கூடியது தான் ஆஷாட நவராத்திரி. இந்த நவராத்திரி இன்று ஆரம்பித்து 15ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாளோ அல்லது தினமும் சில பொருட்களை நாம் வாங்கி பெண்களுக்கு தானமாக தருவதன் மூலம் தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அப்படிப்பட்ட பொருட்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே நவராத்திரி சமயங்களில் வீட்டில் கொலு வைத்து அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து வழிபாடு செய்து அவர்களுக்கு சில பொருட்களை தானமாக தருவது உண்டு. இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுடைய குடும்பத்தில் நன்மைகள் நடக்கும் என்பது கூறப்படுகிறது. அதேபோல்தான் இந்த ஆஷாட நவராத்திரி சமயத்திலும் சில பொருட்களை பெண்களுக்கு வாங்கி தருவதன் மூலம் நம் குடும்பத்தில் நன்மைகள் நடைபெறும். அந்த பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பொருட்களை நம்மால் இயலும் பட்சத்தில் 9 நாட்களுமே அருகில் இருக்கக்கூடிய பெண்களை வீட்டிற்கு அழைத்து தரலாம். அவ்வாறு வீட்டிற்கு அழைத்து தர முடியாத பட்சத்தில் அருகில் இருக்கும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று அங்கு வரும் பெண்களுக்கு இதை தரலாம். தங்களால் இயன்ற எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் எத்தனை பெண்களுக்கு வேண்டுமானாலும் இந்த தானத்தை தரலாம். இப்பொழுது தானம் செய்ய வேண்டிய பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
இதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறத்திலான கண்ணாடி வளையல்கள். ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த மூன்று நிறங்களும் கலந்தார் போல அல்லது தனித்தனியாகவோ கண்ணாடி வளையலை வைத்து அதனுடன் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், பூ மஞ்சள் குங்குமம், வசதி இருப்பவர்கள் ஜாக்கெட் பிட்டு போன்றவற்றை வைத்து பெண்களுக்கு தர வேண்டும்.
இதில் குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் இந்த தானத்தை தரும் பொழுது மஞ்சள் கயிறில் விரலி மஞ்சள் கட்டியிருப்பது போல் தானமாக தந்தால் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்கள் இந்த தானத்தை மற்ற பெண்களுக்கு தரும் பொழுது அவர்கள் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டில் தெய்வ நடமாட்டம் என்பது ஏற்படும். தெய்வங்கள் நிரந்தரமாக வீட்டில் தங்க ஆரம்பிப்பார்கள்.
இதையும் படிக்கலாமே: ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தானத்தை முழு மனதுடன் செய்யும் பெண்களுக்கு வராகி அம்மனின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். நன்மைகள் உண்டாகும்.