தற்போது ஆனி மாதத்தின் ஆஷாட நவராத்திரியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளைய தினம் 27-6-2025 வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து ஆஷா ட நவராத்திரி இரண்டாவது நாள் கொண்டாடப்படுகிறது. வறுமையில் இருப்பவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், கடன் சுமையில் சிக்கி இருப்பவர்கள் எல்லாம், நாளைய தினம் வெள்ளிக்கிழமை பூஜையோடு சேர்த்து வாராகி அம்மனை மனதில் நினைத்து பின் சொல்லக் கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள்.
உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை விரட்டி அடிக்கப்படும். வருமானம் பெருகும். கடன் சுமை குறையும். சக்தி வாய்ந்த இந்த நன்னாளில் செய்ய வேண்டிய வாராகி வழிபாடை பற்றிய சில ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.
ஆஷாட நவராத்திரி இரண்டாவது நாள்
வழக்கம்போலதான் உங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை என்றால் பூஜை அறையை எப்படி அலங்காரம் செய்வீர்களோ, சுவாமி படங்களுக்கு பூக்களை போட்டு அலங்காரம் செய்து அழகாக விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு வாசம் நிறைந்த தூபங்கள் போடுங்கள். வாராஹியின் திருவுருவப்படம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இந்த வழிபாட்டை நீங்கள் வீட்டில் மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு முதலில் ஒரு சில குறிப்பிட்ட நெய்வேதியம் தேவை. பின் சொல்லக்கூடிய மொத்த நெய்வேத்தியத்தையும் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதில் எது உங்களுக்கு சௌகரியமாக இருக்கிறதோ அதை வைக்கலாம்.
பசும்பாலில் செய்த பால் பாயாசம், மாதுளம் பழம் முத்துக்களை உரித்து அழகாக கிண்ணத்தில் போட்டு அதில் கொஞ்சம் தேன் ஊற்றி நெய்வேத்தியம் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் வெள்ளை நிறத்தில் எந்த இனிப்பு பலகாரம் செய்து வைத்தாலும் சரி, செல்வ செழிப்பு உங்களுக்கு உயரும். நாளைய தினம் இதிலிருந்து ஏதாவது ஒரு பொருளை அம்பாளுக்கு நெய்வேத்தியமாக வையுங்கள். சுத்தமான பசும்பாலில் பணங் கற்கண்டு போட்டு ஏலக்காய் தட்டி போட்டு நெய்வேத்தியம் வைத்தாலும் நல்லது தான். டைமண்ட் கற்கண்டு கூட வைக்கலாம்.
இந்த பொருட்களில் ஏதாவது ஒன்றை அம்பாளுக்கு நெய் வைத்தியம் செய்துவிட்டு, கொஞ்சம் சில்லறை நாணயங்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து, “வஜ்ரகோஷம், வஜ்ரகோஷம், வஜ்ரகோஷம்” என்று சத்தமாக அந்த வாராகியின் மந்திரத்தை உங்களுடைய வீட்டில், நாளைய தினம் வெள்ளிக்கிழமை பூஜையில் உச்சரிக்க வேண்டும். இந்த வார்த்தை வீட்டில் உச்சரித்தால், வீட்டில் வீட்டில் இருக்கும் வறுமையானது வெளியே சென்று விடும்.
வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் நுழைந்து விடும். வீட்டிற்குள் ஒரு துளி தரித்திரம் கூட தங்காது. அந்த சிலரின் நாணயங்களை அப்படியே எடுத்து கிண்ணத்தில் இரண்டு அல்லது மூன்று முறை போடுங்கள். அந்த நாணயத்தின் சத்தமும் வீட்டில் கேட்கட்டும். குடும்பத்தோடு அமர்ந்து பூஜையை நிறைவு செய்துவிட்டு, பிரசாதங்களை பகிர்ந்து உண்ணலாம்.
இவ்வளவுதான். எளிமையான பூஜை வாரகியை மனதில் நினைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய கஷ்டங்களை வாராகி தாயிடம் முறையிட்டு கஷ்டங்கள் தீர பிரார்த்தனை செய்து கொண்டால் போதும். வேண்டிய வரங்கள் உடனடியாக கிடைக்கும். இதோடு இன்னொரு ஆன்மிகம் சார்ந்த தகவல் உங்களுக்காக. வீட்டில் இருப்பவர்களுக்கு தீராத நோய் நொடிகள் இருக்கிறது. படுக்கையிலேயே பெரியவர்கள் இருக்கிறார்கள்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் குபேர தீபம்
அவர்களுக்கு குணமும் ஆகவில்லை. அவர்கள் சிவலோகப் பதவியும் அடைய மாட்டிக்கிறாங்க அப்படின்னா, 1 கிலோ சர்க்கரை வாங்கி நாளை பூஜையறையில் வைத்து வாராகி நினைத்து வழிபாடு செய்து, அந்த ஒரு கிலோ சர்க்கரையை யாருக்கேனும் ஒரு ஏழைக்கு தானமாக கொடுத்து விடுங்கள். நோய் நொடி பிரச்சனைகள் விலகும் ஆயுள் அதிகரிக்கும். இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.