முஷ்டாக் அலி டி20 பயிற்சி : தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட களத்தில் மயங்கிய முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் – வீடியோ

Ashok

தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை நடைபெற இருக்கிறது. இதில் தமிழக அணி ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Dinda

இந்நிலையில் பெங்கால் அணி முஷ்டாக் கோப்பைக்கு தயாராகும் விதமாக இன்று கொல்கத்தாவில் பயிற்சி ஆட்டம் ஒன்றில் கலந்துகொண்டு விளையாடியது. இதில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா பெங்கால் அணியில் ஆடினார்.

இந்நிலையில் பெங்கால் அணி பந்துவீசிய போது கொல்கத்தா மைதான பயிற்சி அணியில் ஆடிய வீரர் டிண்டாவின் பந்தை ஓங்கி அடிக்க அது நேராக சென்று டின்டாவின் நெற்றிப்பகுதியில் பலமான சத்தத்துடன் தாக்கியது. இதனால், பலத்த காயம் ஏற்பட்டு மைதானத்திலே விழுந்தார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் மைதான காப்பாளர்கள். அசோக் டிண்டா இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 அடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தமிழனின் பெருமை கண்டம் விட்டும் ஒலிக்கிறது. நேற்று ஹாமில்டன் மைதானத்தில் ஒலித்த ஏ.ஆர். ரஹ்மான் பாடல். என்ன பாடல் தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்