தமிழனின் பெருமை கண்டம் விட்டும் ஒலிக்கிறது. நேற்று ஹாமில்டன் மைதானத்தில் ஒலித்த ஏ.ஆர். ரஹ்மான் பாடல். என்ன பாடல் தெரியுமா ?

Ground
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Dhoni

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 ரன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கும் முன்னர் ஏ. ஆர். ரஹ்மான் பாடல் மைதானத்தில் ஒலித்தது. இந்த பாடல் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெளிவாக கேட்டது. அந்த பாடல் ரஹ்மான் அவர்களுக்கு ஆஸ்கார் விருதினை பெற்று தந்த ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் இருந்து ஆஜா ஆஜா ஜிங்கிள் என்று துவங்கும் பாடலாகும்.

Team

இந்த பாடலை கேட்டதும் தமிழக ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெருமையினை பற்றி தங்களது கருத்தினை பதிவிட்டனர். இந்திய அணிக்காக இந்த பாடல் ஏற்கனவே பல மைதானங்களில் ஒளிபரப்பபட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

அவர் ஒரு லெஜண்ட். இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள தோனியை பாராட்டவில்லை என்றும் மரியாதை கொடுங்கள் – கங்குலி ஆதங்கம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -