அஷ்டலட்சுமிகளை அழைக்கும் பூஜை

asthalakshmi
- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் அத்தனை கஷ்டங்களும் நீங்க செய்ய வேண்டிய வழிபாடு இந்த அஷ்டலட்சுமி வழிபாடு. அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைத்துவிட்டால் போதும். வாழ்க்கையில் இருக்கக் கூடிய அத்தனை கஷ்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம். ஆனால் இந்த அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதத்தை பெறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

அவர்களை வீட்டிற்குள் அழைத்து, நம் பூஜை அறையில் அமர வைத்து வேண்டிய வரங்களை கேட்டுப் பெறுவது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்தான். ஆனால் ஆன்மீகத்தில் அதற்கும் ஒரு எளிமையான வழிபாடு சொல்லப்பட்டுள்ளது. அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

அஷ்டலட்சுமிகள் வழிபாடு

முதலில் 9 வெற்றிலைகள் வாங்கிக் கொள்ளுங்கள். கிழிசல் இல்லாத வெற்றிலையாக இருக்கட்டும். அஷ்டலட்சுமிகள் எட்டுதான். பிள்ளையாருக்காக ஒரு வெற்றிலை. பூஜையறையை வழக்கம்போல சுத்தம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். பிறகு ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வையுங்கள்.

மஞ்சள் பிள்ளையாருக்கு ஒரு குங்குமம், ஒரு அருகம்புல் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய இந்த பூஜை எந்த ஒரு தடையும் இல்லாமல் நடக்க வேண்டும். அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதம் கிடைக்க எந்த தடையும் வரக்கூடாது என்று விநாயகரிடம், முழு முதல் வேண்டுதலை வைத்துவிட்டு, பிறகு அந்த விநாயகருக்கு முன்பாக எட்டு வெற்றிலைகளை அடுக்க வேண்டும். வெற்றிலையின் காம்பு மேல்பக்கம் இருக்கணும். வெற்றிலையின் வால் பகுதி கீழ் பக்கம் இருக்கணும்.

- Advertisement -

உங்கள் கையில் வாசம் நிறைந்த தாழம்பூ குங்குமம் இருக்க வேண்டும். அஷ்ட லட்சுமிகளின் மந்திரத்தையும் 9 முறை உச்சரிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆதிலட்சுமியை எடுத்துக் கொள்வோம். ‘ஓம் ஆதி லட்சுமியே போற்றி போற்றி’ என்ற நாமத்தை 9 முறை சொல்லுங்கள். முதல் வெற்றிலையின் மேல் குங்குமத்தை போடுங்கள்.

இரண்டாவது தானிய லட்சுமி. இரண்டாவது வெற்றிலையின் மேல் குங்குமத்தை போடணும். 9 முறை குங்குமத்தை போட்டு, 9 முறை ‘ஓம் தானிய லட்சுமியே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லணும். இதே போல 8 லட்சுமி களுக்கும், 8 வெற்றிலையின் மேல் குங்குமத்தை போட்டு, ஒவ்வொரு லக்ஷ்மி மந்திரத்தையும் 9 முறை சொல்லி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி. இதுதான் அஷ்டலட்சுமியின் நாமங்கள். பூஜையை முடித்துவிட்டு எல்லா குங்குமத்தையும் ஒரு சின்ன டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் செய்யவும்.

இதையும் படிக்கலாமே: வீடு சுபிட்சமாக நிலை வாசலில் மாட்ட வேண்டிய படம்

தினமும் இந்த குங்குமத்தை பெண்கள் குழந்தைகள் ஆண்கள் யார் வேண்டும் என்றாலும் நெற்றியில் இட்டு வரலாம். இந்த பூஜையை செய்யும் போது ஒவ்வொரு லட்சுமியும் மன சந்தோஷத்தோடு வந்து உங்கள் வீட்டில் அமர்ந்து கொள்வார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுப்பார்கள். உங்களுக்கு அஷ்டலட்சுமிகளின் ஆசிர்வாதமும் கிடைக்கும். இதன் மூலம் குடும்ப கஷ்டம் தீரும். வாய்ப்பு உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -