அடடா! அனுதினமும் நம்மை, நம்முடனே இருந்து காக்க கூடிய இந்த 1 தெய்வத்தை மட்டும் வழிபட மறந்து விட்டோமே! இவர்களை வழிபட்டால் பிரபஞ்சம் உங்களுக்கு நன்மையை மட்டும் தான் தரும்.

pray1

நம்முடைய குல தெய்வத்திலிருந்து, நமக்குத் தெரிந்த எல்லா தெய்வங்களையும் வழிபாடு செய்ய நாம் மறப்பது கிடையாது. அம்மன் சிவன் பெருமாள் வினாயகர் இப்படி அந்தந்த தெய்வங்களுக்கு என்று வழிபாடு செய்யக் கூடிய சிறப்பான நாட்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த தெய்வங்களை அனுதினமும் நாம் நினைத்து வழிபாடு செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இருப்பினும் நம்மை காக்கக்கூடிய நம்முடனே இருந்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கக்கூடிய இந்த தெய்வங்களை மட்டும் நாம் ஏன் வழிபடுவது கிடையாது? குலதெய்வங்கள் இஷ்ட தெய்வங்கள் வரிசையில், பின் சொல்லப்படும் இந்த தெய்வங்களையும் வழிபடும் வழக்கத்தை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தெய்வங்கள் என்னென்ன, அவர்களை எப்படி வழிபாடு செய்தால் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றிய ஒரு பதிவுதான் இது.

ashtathick-balagar

நாம் வாழக்கூடிய இந்த பிரபஞ்சம் எட்டுத்திக்கை கொண்டுள்ளது. அதாவது கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு இந்த எட்டுத்திக்கும் தலைவர்களாக சொல்லப்படும் இந்திரன், அக்னி தேவன், எமன், குபேரன், நிருதி, வருண பகவான், வாயு பகவான், ஈசானை, இவர்கள் உள்ளார்கள். எட்டு திக்கிலும் இருக்கும் இந்த அஷ்டதிக் பாலகர்களை நாம் அனுதினமும் நினைத்து வழிபாடு செய்வது கிடையாது.

ஆனால் ஏதேனும் குறிப்பிட்ட சில விசேஷ தினங்களில் குருமார்களை அழைத்து வீட்டில் பூஜை வைத்தால் அவர்கள் இந்த அஷ்டதிக் பாலகர்களை வணங்கி விட்டுத்தான் பின்பு, அந்த விசேஷ பூஜையை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

homam

எடுத்துக்காட்டாக வீட்டில் ஹோமங்கள் நடத்தினாலும் சரி ஏதாவது பூஜை புனஸ்காரங்களை செய்தாலும் சரி, அதில் இந்த எட்டுதிக்கு பாலகர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுவிட்டு தான், அதன் பின்பு அந்த பூஜையை சிறப்பாக தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. கும்பாபிஷேகங்களிலும் முதலில் அஷ்டதிக் பாலகர்களை வழிபாடு செய்துவிட்டு தான் அதன் பின்பு கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படியாக ஏதாவது ஒரு விசேஷ தினங்கள் வந்தால் தான் இவர்களை வணங்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. தினம்தோறும் உங்களுடைய இறை வழிபாட்டோடு சேர்ந்து, உங்களை அனுதினமும் பாதுகாக்கக்கூடிய இந்த எட்டு திக்கு பாலகர்களையும் அவர்களுடைய பெயரை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

homam

எட்டுத்திக்கிலும் இருந்து வரக்கூடிய கஷ்டங்களை சுலபமாக நாம் சமாளித்துவிடலாம். பிரபஞ்சத்தில் நமக்காக வரக்கூடிய கஷ்டங்கள் எட்டுத்திக்கிலிருந்தும் தான் வரப் போகின்றது. அப்போது இந்த தெய்வங்கள் நமக்காக உதவியாக நிற்கும். இன்னும் சொல்லப்போனால் தினமும் இவர்களை வழிபாடு செய்து வந்தால் இந்த பிரபஞ்சத்தை நாம் சுலபமாக ஜெயித்துவிடலாம். பிரபஞ்சத்தில் இருந்து வரக்கூடிய நல்ல சக்திகளை ஈர்க்கும் தன்மை நமக்குள் தானாகவே வந்துவிடும்.

vilakku-praying

உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த 8 பகவானின் பெயரையும் உச்சரித்து மந்திரமாக கூட சொல்லலாம்.
ஓம் இந்திர தேவா போற்றி!
ஓம் அக்னி தேவ போற்றி!
ஓம் எமதர்மராஜா போற்றி!
ஓம் குபேர பகவானை போற்றி!

vasthu-logo

ஓம் நிருதி பகவானே போற்றி!
ஓம் வருண பகவானே போற்றி!
ஓம் வாயு பகவானே போற்றி!
ஓம் ஈசான்ய பகவானே போற்றி!

pray

இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்து விட்டு அதன் பின்பு தினசரி இறைவழிபாட்டை செய்பவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தை வெல்லும் சக்தி கூடிய விரைவில் கிடைத்துவிடும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இன்று(24/2/2021) மாலை இதை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கும்! பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை என்பது வரவே வராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.