இன்று(24/2/2021) மாலை இதை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கும்! பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை என்பது வரவே வராது.

sivan-nandhi-pradosham

சிவனுக்குரிய விசேஷ தினங்களில் பிரதோஷமும் ஒன்று. அதிலும் குறிப்பாக புதன் கிழமை வரும் பிரதோஷம் ஆனது விசேஷமான பலன்களைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. மாதந்தோறும் வரும் பிரதோஷ தினங்களில் சிவ வழிபாடு செய்து இவற்றை கடைபிடித்தால் வாழ்க்கையில் இன்னல்கள் என்பது வரவே செய்யாது. சிவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை அந்நாளில் தொடர்ந்து உச்சரித்து வந்தால் கடன் பிரச்சினை நீங்கி, தொழில் விருத்தி உண்டாகி, பணவரவு சீராக இருக்கும். அவ்வகையில் இன்று மாலை பிரதோஷ பூஜை செய்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.

runavimosana-lingam

பிரதோஷ காலம் என்பது மாலை 4:30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் ஆகும். இக்காலம் மிகவும் விசேஷமாக கருதப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா? தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து வந்த பொருட்களில் ஆலகால விஷமும் ஒன்றாகும். ஆலகால விஷத்தைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கிய பொழுது, அனைத்து உயிர்களையும் காப்பாற்ற ஈசன், ஆலகால விஷத்தை உண்டு விட்டார். அவரை காப்பாற்ற பார்வதி தேவி முயன்ற பொழுது விஷமானது தொண்டை குழியிலேயே நின்றது. இது இந்த பிரதோஷ கால வேளையில் நடந்த ஒரு சம்பவமாகும்.

அதன் பிறகு சிவபெருமான் கைலாயத்தில் திருநடனம் புரிந்தார். அவருடைய நடனத்திற்கு ஏற்ப கலைமகள் வீணை வாசிக்க, மகாலட்சுமி தேவி பாடல் புரிந்தார். இந்திரன் புல்லாங்குழல் ஊத, மிருதங்கம் வாசிக்க திருமாலும் ஆயத்தமாய் இருந்தார். பிரம்மதேவர் தாளமிட, சிவபெருமானுடைய தாண்டவம் காண அங்கிருந்த தேவர்களும், முனிவர்களும் கைலாயம் வந்து சேர்ந்தனர் என்பது புராண வரலாறு ஆகும்.

siva thandava 1

அதனால் தான் இந்த பிரதோஷ கால வேளையில் நாம் வேண்டும் வேண்டுதலுக்கு சிவபெருமான் உட்பட அனைத்து இறைவனுடைய அருளாசியும் நமக்கு கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். பிரதோஷ கால வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெறும் அபிஷேகங்களும், ஆராதனைகளும் கண்டு கழித்தால் வாழ்வில் சகல, சௌபாக்கியங்களும் கிடைக்கும். மாதம்தோறும் வரும் ஒவ்வொரு பிரதோஷ வேளையிலும் இவற்றை தொடர்ந்து கடை பிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனை என்பது ஏற்படுவதில்லை.

- Advertisement -

வீட்டில் சிவபெருமானும், பார்வதி தேவியும் இணைந்த படத்திற்கு வில்வ மாலை சாற்றி, தீப, தூப, ஹாரத்தி காண்பித்து வழிபாடு செய்து, விரதம் இருந்து, தொடர்ந்து சிவ நாமத்தை உச்சரித்து வருபவர்களுக்கு தடைகள் யாவும் விலகும். மக்கட் பேறு உண்டாகும் என்பது நியதி. பிள்ளை இல்லாமல் இருப்பவர்கள் வீட்டில் இதனை கட்டாயம் கடைபிடிக்கலாம். மேலும் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலனை காணலாம்.

பிரதோஷ கால வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நந்தி பகவானுக்கும், சிவனுக்கும் தேவைப்படும் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். சந்தனம், பால், தயிர், எண்ணை, வில்வம், அரளி, தாமரை, தேன், திருநீறு, பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் போன்ற பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வது வழக்கம். இவற்றில் ஏதாவது ஒரு பொருளை உங்களால் முடிந்தால் வாங்கி கொடுப்பது சிறப்பான பலனை உண்டாக்கும். இதனைத் தவற விட்டு விடாதீர்கள்! பிரதோஷ காலம் துன்பங்கள் நீக்கி, பாவங்களையும் விலக்கி, நல்ல ஒரு செல்வ செழிப்பான வாழ்க்கையை உண்டாக்கி தரும்.

இதையும் படிக்கலாமே
கண்ணுக்குத்தெரியாத வாஸ்து தோஷத்தால், வீட்டில் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு கூட ஒரே நாளில் தீர்வை கொடுக்கும் அதிசக்தி வாய்ந்த பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.