கேப்டனாக அறிவிக்கபட்ட ரவிச்சந்திரன் அஷ்வின் . இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்குமா – ஆவலில் தமிழக ரசிகர்கள்

Ashwin

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிவருறது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

ashwin

இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் சூரத்தில் சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அந்த தொடரில் தமிழக அணி கலந்துகொள்கிறது. அந்த தொடருக்கான தமிழக அணிக்கு ரவிச்சந்திரன் அஷ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தேசிய அணியின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடிவரும் அஷ்வின் இந்த முஷ்டாக் தொடரில் தனது திறமையினையும், உடற்தகுதி ஆகியவற்றை நிரூபித்தால் மீண்டும் இந்திய தேசிய அணிக்காக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

ashwin

இந்திய அணியின் முக்கியவீரராக திகழ்ந்தவர் அஷ்வின். ஆனால், அணியில் இளம்வீரர்களான குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோரின் வருகைக்கு பின்னர் அவர் அணியில் இருந்து சிறிது சிறிதாக ஓரங்கட்டப்பட்டார். இது அவருக்கு ஒரு சிறப்பான தருணம் ஆகும் இந்திய அணிக்கு நுழைய இதனை பயன்படுத்துவார் என்று நம்பலாம்.

இதையும் படிக்கலாமே :

ஆளே இல்லாத ஆக்லாந்து நகரில் கூட தல தோனிக்கு கிடைக்கும் ராஜ மரியாதை. அது நியூசி மைதானமா , இல்லை இந்திய மைதானமா – வைரல் இல்லை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்