ஆளே இல்லாத ஆக்லாந்து நகரில் கூட தல தோனிக்கு கிடைக்கும் ராஜ மரியாதை. அது நியூசி மைதானமா , இல்லை இந்திய மைதானமா – வைரல் வீடியோ

Ms

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Dhoni

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

இந்த போட்டியில் தல தோனி ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அவர் பேட்டிங்க்கு களமிறங்கும் போது அங்கு இருந்த ரசிகர்கள் தோனி தோனி என்று உற்சாகமாக பலமாக பாடத்துவங்கினார். அப்போது அந்த மைதானம் நியூசிலாந்தில் உள்ளதா? அல்லது இந்தியாவில் உள்ளதா? எனும் குழப்பமே ஏற்பட்டது. இதோ அந்த வீடியோ :

இந்திய அணியின் தோனிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். அவரின் வருகைக்கு ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற குரல்கள் பல வந்து நாம் கண்டுள்ளோம். உண்மையில் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரும் சகாப்தம் தல தோனி என்றால் அது மிகையல்ல.

இதையும் படிக்கலாமே :

நீங்கள் சரியா செஞ்ஜீ ங்க கிரேட் சார் நீங்க. நேற்றைய போட்டியின் தோல்விக்கு இதுவே காரணம் – வில்லியம்சன் ஓபன் டாக்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்