பவுலர்களை பாதுகாக்க இதனை கிரிக்கெட் நிர்வாகங்கள் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் – அஸ்வின் கோபம்

ashwin

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் தற்போது இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்போதே ஒருநாள் அணியில் இருந்து இவர் கழற்றி விடப்பட்டார்.

ashwin

தற்போது சையத் முஷ்டாக் டி20 கோப்பை தொடருக்காக பயிற்சி எடுத்துவரும் அஷ்வின் பவுலர்கள் பாதுகாப்பு குறித்து பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அஷ்வின் கூறியதாவது : கடந்த சில நாட்களுக்கு முன் அசோக் டின்டாவின் தலையில் பந்து பட்டு அந்த இடத்திலே விழுந்தார். பிறகு மருத்துவமனைக்கு சென்று பெரிய பிரச்னை இல்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும் இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க பவுலர்களுக்கு முகத்தை பாதுகாக்க பேஸ் மாஸ்க் அதாவது முகத்தை மூடும் வகையில் பாதுகாப்பு உபகரணம் தேவை என்று அனைத்து கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் தனது வேண்டுகோளை ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மேலும், சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தினை மெதுவாக போடுவார்கள்.

Umpire

தற்போது உள்ள பேட்ஸ்மேன்கள் பலமாக அடிக்க கூடியவர்களாக உள்ளனர். எனவே எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எனவே பேஸ் மாஸ்க் முறையினை எடுத்து வருமாறு கூறினார் அஷ்வின். இதற்கு பல வீரர்கள் தங்களது ஆதரவினை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

உலககோப்பைக்கு முன்னால் திருமணம் செய்ய இருக்கும் ஹார்டிக் பாண்டியா ? – முகத்தில் அடித்த மாதிரி பதிலளித்த முன்னாள் காதலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்