உலககோப்பைக்கு முன்னால் திருமணம் செய்ய இருக்கும் ஹார்டிக் பாண்டியா ? – முகத்தில் அடித்த மாதிரி பதிலளித்த முன்னாள் காதலி

Pandya

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் பாலிவுட் கதாநாயகிகளுக்கும் இடையே காதல் என்பது தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. ஜடேஜா, ஜாகிர் கான், யுவராஜ் என துவங்கி கோலி வரை நிறைய கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நாயகிகளை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

pandya

இந்தவரிசையில் இந்திய வீரரான ஹார்டிக் பாண்டியா மற்றும் பாலிவுட் ஹீரோயின் எல்லி அவ்ரம் என்பவருக்கும் திருமணம் முடிவாகிவிட்டது என்றும், ஆனால், அந்த திருமணத்தினை உலககோப்பைக்கு முன் செய்யவேண்டாம் என்றும் பாண்டியா ரசிகர்கள் கேட்டுக்கொள்வது போன்றும் இணையத்தில் ஒரு வீடியோ வலம் வந்தது.

அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு பதிவினை வெளியிட எல்லி : இந்த வீடியோ யார் செய்தார்கள், யார் பதிவிட்டார்களோ அவர்களை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது. நடந்தவை அனைத்தும் எப்போதோ முடிந்துவிட்டது. அதை எல்லாம் மறந்து என் வாழ்கையில் எனனை முன்னேற விடுங்கள். எனது வேலை இப்போது நடிப்பது மட்டுமே அதை பார்த்து நான் போய்க்கொண்டு இருக்கிறேன்.

இதுபோன்ற தேவையில்லாத பதிவுகளை இணையத்தில் பதிவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பாண்டியா சமீபத்தில் தான் பெண்களுக்கு எதிரான கருத்துகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து ரோஹித், புவனேஷ்வர குமார் அவுட். அவர்களுக்கு பதிலாக இவர்கள் ஆடுகின்றனர் – இந்திய அணி அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்