இதெல்லாம் எனது வெற்றிக்கு தடையல்ல. சச்சின், பிராட்மேன் போன்றவர்களும் இதனை கடந்தது தான் சாதித்தார்கள் – அஸ்வின் ஆதங்கம்

ashwin

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இந்திய அணியில் டெஸ்ட் வடிவ போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் அவர் கலந்துகொண்டு விளையாடி ஓர் ஆண்டுக்கும் மேல் ஆகிறது.

ashwin

டெஸ்ட் போட்டிகளில் கூட அடிக்கடி காயம் ஏற்பட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் நிறைய போட்டிகளை தவறிவிட்டார். இதுகுறித்து சென்னையில் பேட்டி ஒன்றினை அளித்த அஸ்வின் காயம் குறித்தும், அணியில் தன் இடம் குறித்தும் பேசினார்.

அதில் அஸ்வின் கூறியதாவது : காயம் என்பது அனைத்து வீரர்களுக்கும் ஏற்படும் பொதுவான ஒன்றாகும். அந்தக்காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்த ப்ராட்மேன் முதல் சச்சின் வரை அனைவருமே சில சமயத்தில் காயத்தால் அவதிப்பட்டு பிறகு மீண்டும் அணியில் இணைந்து சாதித்து காட்டியுள்ளனர். எனவே, எனக்கும் அது ஒரு தடையல்ல.

ashwin

மீண்டும் அணியில் இணைந்து எனது திறமையை வெளிப்படுத்துவேன். உலகக்கோப்பை தொடரில் எனது இடம் பற்றி எனக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் ஒருநாள் அணிக்கு திரும்ப கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன் என்று அஸ்வின் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

இதிலும் படிக்கலாமே :

நான் தவறான முடிவினை எடுத்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் ராஸ் டெய்லர். மனமுடைந்த – கேன் வில்லியம்சன்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்