நான் தவறான முடிவினை எடுத்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் ராஸ் டெய்லர். மனமுடைந்த – கேன் வில்லியம்சன்

kane-williamson
- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபாரமாக தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடர் நியூசிலாந்து அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

rohith

நேற்றய போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி பின்வரிசை வீரர்களின் அதிரடியால் ஓரளவு நல்ல ரன்கள் 252 அடித்தது. பிறகு 253 ரன்கள் இலக்கு என்று ஆட துவங்கிய நியூசிலாந்து அணி துவக்கம் முதலே விக்கெட்டை பறிகொடுத்த வண்ணம் இருந்தது. அதிலும் அந்த அணியின் ராஸ் டெய்லர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது.

- Advertisement -

ஆனால், ராஸ் டெய்லரின் இந்த விக்கெட் அவுட் இல்லை என்பதை வீடியோ மூலம் நாம் தெரிந்திருப்போம். இதுகுறித்து போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த வில்லியம்சன் : நான் தவறு செய்து விட்டேன். என்னிடம் அம்பயரின் தீர்ப்பை எதிர்த்து முறையிடம் வாய்ப்பு இருந்தும் உங்களை அவுட் என்று நினைத்து முறையீடு செய்யாமல் விட்டுவிட்டேன்.

- Advertisement -

இப்போது அது அவுட் இல்லை என்று தெரிந்ததும் என் மனம் உடைந்துவிட்டது. அந்த நேரத்தில் நான் முறையீடு செய்து இருக்க வேண்டும். நீங்கள் அணிக்கு மிகவும் முக்கியமான வீரர் உங்களது விக்கெட் சாதாரணமானது இல்லை என்று மனமுருக மன்னிப்பு கேட்டார் வில்லியம்சன்.

இதையும் படிக்கலாமே :

சாஹலின் பேட்டிக்கு பயந்து மைதானத்தில் தலை தெறிக்க சிரித்துக்கொண்டே ஓடிய தல தோனி – வைரல் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -