வளர்பிறை அஷ்டமியில் மகாலட்சுமியை வழிபட கூற வேண்டிய மந்திரம்

mahalakshmil-1

“பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்று பொருட்ச்செல்வத்தின் அவசியத்தைப் பற்றி திருக்குறளில் “வள்ளுவப் பெருந்தகை” சரியாகக் கூறியுள்ளார். இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் பெரும் “கோடீஸ்வரனாக” ஆக முடியாவிட்டாலும் ஒரு “லட்சதிபதியாவது” ஆக ஆசைப்படுவதில் தவறேதுமில்லை. அப்படி நமக்கு மிகுந்த செல்வம் கிடைக்க அந்த செல்வத்தின் உருவான “மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை” நமக்கு கிடைக்கவேண்டும். அதற்கான மந்திரம் தான் இது.

santhana lakshmi

மந்திரம் :
“ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஷ்ரீம்
கமலே கமலாலயே ப்ரஸீத் ப்ரஸீத்
ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஷ்ரீம்
மஹாலக்ஷ்மாயே நமஹ”

இம்மந்திரத்தை வளர்பிறை அஷ்டமி திதிகளில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று, அங்கு தாயார் சந்நிதியின் முன்பு நெய்தீபம் ஏற்றி, 16 முறையோ அல்லது 108 முறையோ உரு ஜெபிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
மனக்கஷ்டங்களை போக்கும் மாரியம்மன் தாலாட்டு

வீட்டிலேயே மகாலட்சுமியை வழிபடுபவர்கள், மகாலட்சுமியின் படத்திற்கு முன் நெய்தீபம் ஏற்றி, பால், கற்கண்டு நிவேதனம் வைத்து இம்மந்திரத்தை 16 அல்லது 108 முறை ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை அஷ்டமி திதிகளில் இதைச் செய்து வர உங்களுக்கு “லட்சுமி கடாட்சம்”ஏற்பட்டு உங்களின் பொருளாதார நிலை மேன்மேலும் உயரும்.