அஷ்டமி, நவமி அன்று ஒரு முடிவை எடுத்தால் இப்படி ஒரு ஆபத்து இருக்கிறதா? இதுநாள் வரை இது தெரியாம போச்சே!

ramar-chandran
- Advertisement -

நம் முன்னோர்கள் சில நாட்களை நல்ல காரியத்திற்கு பயன்படுத்த மாட்டார்கள். அதனை கெட்ட நாள் என்று கூறி ஒதுக்கி விடுவார்கள். அது எதற்காக? என்றே தெரியாமல், பலரும் அதை கடைப்பிடித்தும் வருவார்கள். அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்று, அவர்களுடைய சந்ததிகளும், அதனை தொடர்ந்து கடைபிடிக்கும். அப்படியான நாளாக அஷ்டமி மற்றும் நவமி இருக்கிறது. இந்த அஷ்டமி, நவமி நாட்களில் ஒரு முடிவை எடுத்தால் அது சரியாக இருக்கவே இருக்காது என்பது நம்பிக்கை. இதில் இருக்கும் அறிவியல் உண்மை என்ன? அன்றைய நாளில் முடிவு எடுத்தால் என்ன நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

vilakku-poojai

அஷ்டமி மற்றும் நவமி இந்த இரண்டு நாட்களும் ஏன் நல்ல நாட்களுக்கு அல்லது நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தப்படவில்லை தெரியுமா? அந்த நாளில் என்ன செய்தாலும் ஆபத்து தான் என்று எங்கும் கூறப்படவில்லை. அஷ்டமி, நவமி நாட்களில் சாதாரணமாக எல்லோரும் வேலைக்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். ரயில்களும், விமானங்களும் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. அது அது அதனுடைய வேலைகளை செய்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இந்த நாட்களை முடிவெடுக்க தகுதியான நாள் அல்ல என்று கூறுவதன் பின்னணி என்ன?

- Advertisement -

அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் பொதுவாக ஊர்களுக்கு செல்வதில்லை. அன்றைய நாளை மட்டும் நல்ல விசேஷ நாட்களுக்கு அல்லது கோவில் திருவிழாக்களுக்கு கலந்து கொள்வதற்கு செல்ல வேண்டியவர்கள் தவிர்த்து விடுவார்கள். அஷ்டமி மற்றும் நவமி அல்லாத நாட்களில் இது போன்ற விஷயங்களுக்கு வெளியில் புறப்படுவது வழக்கம். எந்த ஒரு சுப காரியங்களும் இந்த நாட்களில் நடத்தப்பட மாட்டாது. முக்கிய முடிவுகளையும் இந்த நாளில் எடுக்கவே மாட்டார்கள். புதிதாக எந்த ஒரு தொழிலையும் துவங்க மாட்டார்கள். இதையெல்லாம் கண்மூடித்தனமாக யாரும் செய்யவில்லை.

earth-moon1

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் இரவும், பகலும் என்று மாறி மாறி நமக்கு வருகிறது. இப்படி சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது சரியாக அஷ்டமி நாள் வரும் பொழுது பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் இருக்கும். இப்படி சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் சரியாக நிற்கும் பொழுது அந்த இரண்டின் உடைய சக்தியும், பூமியை பாதிக்க செய்கிறது. அதாவது ஒரு வித அதிர்வலைகளை உண்டாக்குகிறது.

- Advertisement -

இந்த அதிர்வலைகள் பூமியில் இருக்கும் பொழுது, அதில் வாழும் மனிதர்களுக்கு சரியான முடிவை எடுக்கும் மனநிலை இருக்காது. ஒரு நிலை இல்லாமல் மனிதனுடைய மூளை மாறிக் கொண்டே இருக்கும். நவமி முடிந்த பின் தான் பூமி தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த காரணத்தினால் தான் அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் எந்த ஒரு முடிவையும் எடுப்பது சரியாக இருக்காது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். விஞ்ஞானத்தையும் விஞ்சிய அறிவு, நம் முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது பெருமையாகத் தான் இருக்கிறது.

ramar

நவமி அன்று ஸ்ரீராமன் பிறந்தார். அதனால் தான் அவருக்கு பதினான்கு வருடங்கள் வனவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. அதே போல் தான் அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார். அதனால் தான் அவர் மிகப்பெரிய போர் ஒன்றை சந்திக்க வேண்டி இருந்தது. இந்த நாட்களில் பிறந்தவர்கள் இறை வழிபாடுகளில் ஆர்வம் செலுத்தினால் நல்லதொரு அதிர்ஷ்ட வாழ்வை பெற முடியும். அஷ்டமி, நவமி திதிகள் இறை வழிபாட்டிற்குரிய நல்ல நாட்கள் ஆகும். கால பைரவரை வணங்கினால் மனத்தெளிவு ஏற்படும். அஷ்டமியில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது என்று கூறுவதெல்லாம் கிருஷ்ணர் பிறந்ததன் அடிப்படையில் தானே தவிர அதில் உண்மை எதுவும் இல்லை.

இதையும் படிக்கலாமே
துர்க்கை அம்மனை இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு துக்கம் இல்லை! துன்பம் இல்லை! துயரமும் இல்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -