அஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

astrology

அஸ்தம்

astham

அஸ்தம் என்றால் ‘உள்ளங்கை’ என்று பொருள். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமானது நமது கை விரல்களின் நுனிகளைக் குறிப்பதுபோல அமைந்துள்ளன. கன்னி ராசியைச் சேர்ந்த இதன் ராசிநாதன், புதன்.

பொதுவான குணங்கள்:

நல்ல அறிவு, விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, அளவு கடந்த தன்னம்பிக்கை இவர்களது குணாதிசயங்கள். பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிப்பவர்கள். ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற வாசகத்துக்கு ஏற்ப பணிந்து நடந்து, பெரிய பதவிகளைப் பெறுபவர்கள். அன்பு, காதல், இரக்கம் போன்ற குணச்சிறப்புகள் இவர்களுக்கு உண்டு. மனம் லயிக்காத காரியத்தைச் செய்யமாட்டார்கள்.
astrology wheel

அஸ்தம் நட்சத்திரம் முதல் பாதம்:

இது செவ்வாயின் அம்சம். பொய் புரட்டு இல்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். வீண் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். நல்லவர்கள்.

அஸ்தம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:

இது சுக்கிரனின் அம்சம். கவர்ச்சியான தோற்றத்தை விரும்புபவர்கள். சுக போகங்களில் நாட்டமுள்ளவர்கள். பயந்த சுபாவம் உள்ளவர்கள். நீதி, நேர்மையில் நாட்டம் மிக்கவர்கள்.
astrology-wheel

அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: 

இதன் அதிபதி புதன். தெய்வ பக்தியும், நேர்மையான குணமும் உள்ளவர்கள். அறிவுப் பசி உள்ளவர்கள். பேச்சுத் திறமையும், வியாபாரத் திறமையும் உள்ளவர்கள். கலைத்துறையிலும் ஈடுபாடு இருக்கும்.

அஸ்தம் நட்சத்திரம் நான்காம் பாதம்:

இதன் அதிபதி சந்திரன். மனத்தின் விருப்பப்படி வாழ நினைப்பவர்கள். ஆசை, பாசம், நேசம் மிக்கவர்கள். தயை, இரக்கம் உள்ளவர்கள். பகிர்ந்துண்டு வாழ்வதில் மகிழ்ச்சி பெறுபவர்கள். தலைமை தாங்கும் குணங்கள் உண்டு.

மற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இது போன்ற மேலும் பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.