லட்சுமி நாராயண யோகம் பெரும் ராசிகள்

lakshmi nayarar cash joatham man
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் லட்சுமி நாராயண யோகம் என்பது அனைத்து யோகங்களிலும் விட மங்களகரமானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஒரே ராசியில் சுக்கிரனும், புதனும் சஞ்சரிக்கும் போது இந்த யோகம் உருவாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி சுக்கிரன் லட்சுமி தாயாரின் வடிவமாகவும், புதன் நாராயணரின் வடிவமாகவும் கருதப்படுகிறது இந்த இருவரும் இணைந்து உருவாகும் யோகம் தான் இந்த லட்சுமி நாராயண யோகம்.

இந்த முறை டிசம்பர் மாதத்தில் இறுதியில் இந்த யோகம் உருவாகப் போகிறது. விருச்சக ராசியில் புதனும் சுக்கிரனும் ஒன்றாக இணைய இருப்பதால் இந்த யோகம் நிகழ்வு இருக்கிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் லட்சுமி நாராயண யோகம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தாயாரின் அருளும் நாராயணரின் அருளும் சேர்ந்தே கிடைப்பது பெரும் பாக்கியம்.

- Advertisement -

இந்த லட்சுமி நாராயண யோகமானது 200 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க இருப்பதாக ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது. இந்த நிகழ்வு டிசம்பர் 28ஆம் தேதி உருவாக உள்ளதால் அதன் தொடர்ந்து வரும் 2024 அதிஷ்ட பெரும் ராசிக்காரர்கள் யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

லக்ஷ்மி நாராயணர் யோகம் பெறும் ராசிக்காரர்களில் கடக ராசி காரர்கள் அதிக பலனை பெற போகிறார்கள். 2024 ஆம் ஆண்டு ஆரம்பம் முதலில் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை பல மடங்கு உயரப் போகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் விரைவில் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். திருமண வாழ்க்கை சாதகமாக இருக்கும். பணவரவு தாராளமாக கிடைக்கும். மொத்தத்தில் ராஜபோக வாழ்க்கை வாழக் கூடிய காலக்கட்டம் இது என்றே சொல்லலாம்.

- Advertisement -

விருச்சகம்

இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகம் சிறப்பான பலன்களை தர இருக்கிறது. இந்த யோகத்தின் மூலமும் இவர்களின் கடின உழைப்பால் வியாபாரத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தை அடைந்து லாபத்தை பெறுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். புதிய தொழில் தொடங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். இதனால் புதிய வருமானங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். நிதி நிலைமை பல மடங்கு உயரும். இந்த ராசிக்காரர்களும் நல்ல பண வரவை பெறக் கூடிய அதிர்ஷ்டமான காலக்கட்டம் இது.

தனுஷ்

இந்த யோகத்தால் சிறப்பான யோகத்தை பெறக்கூடியவர்களில் தனுசு ராசிக்காரர்களும் உண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் உருவாகும். இதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் மிகப்பெரிய நிலைமைக்கு செல்லக் கூடிய அற்புதமான காலமாக இதை மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

கும்பம்

இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகமானது செல்வ மழையின் பொழிய போகிறது. எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் சிறப்பாக பணியாற்றி ஆதாயத்தை காண்பீர்கள். குடும்பத்துடன் அதிகமாக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். பொன் பொருள் வாங்கி குவிக்க கூடிய யோகம் வரும். வங்கி இருப்புகள் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் சொத்துக்கள் பெருகி சுகபோக வாழ்க்கை வாழ கூடிய காலம் இது.

இதையும் படிக்கலாமே: சனி சுக்கிரன் சேர்க்கையால் யோகத்தை பெரும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி இந்த பலன்கள் தரப்பட்டுள்ளது. பொதுவாக லஷ்மி நாராயண யோகத்தினால் கிடைக்கக்கூடிய பலன்கள் எந்த ராசிக்கு கிடைக்கும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் இவர்களுடைய கிரக சூழ்நிலைக்கு ஏற்றவாறு இதில் சில மாற்றங்களுக்கு வாய்ப்புகள் உண்டு என்று எந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -