அகண்ட சாம்ராஜ்ய யோகம் பெரும் லக்கினங்கள்

guru bhagavan samrajyam
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு கிரகங்கள், லக்கினங்கள் ராசிகள் இணையையும் தன்மையே யோகம் என்று சொல்வார்கள். அந்த வகையில் யோகத்தை தரக் கூடிய அகண்ட சாம்ராஜ்ய யோகம் எப்படி உருவாகும் அதனால் என்ன பலன்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அகண்ட சாம்ராஜ் யோகம் பெரும் லக்னங்கள்

அகண்ட சாம்ராஜ்யமானது பெரும் பொருள், நிலம், அதிகாரம், புகழ் என அனைத்தையும் தரக் கூடியது. மன்னருக்கு நிகரான வாழ்க்கையை அமைத்து தரக் கூடியதும், தான் சார்ந்த துறையில் உச்சத்தை பெறக் கூடிய யோகத்தும் தருவது தான் இந்த அகண்ட சாம்ராஜ்ய யோகம்.

- Advertisement -

அகண்ட சாம்ராஜ் யோகம் ஒருவரது ஜாதகத்தில் உருவாக வேண்டும் எனில் குரு பகவான் கேந்திரம் மற்றும் மறு திரிகோண அதிபதியாக வரவேண்டும். அதாவது குரு பத்தாம் வீட்டுக்கு அதிபதியாகவோ அல்லது ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியாகவோ வந்தால் தான் இந்த அகண்ட சாம்ராஜ் யோகம் உருவாகும்.

இந்த யோகத்தில் குரு பகவான் நல்ல பலன்களை தருவார் என்பதில் சந்தேகமே இல்லை. பெயர், புகழ், செல்வாக்கு என அந்தஸ்துடன் வாழ வைக்க கூடிய பலன்கள் வாரி வழங்கக் கூடிய யோகமாக இது கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த அகண்ட சாம்ராஜ்ய யோகமானது நான்கு லக்கினக்காரர்களுக்கு உருவாகும் என்று சொல்லப்படுகிறது. அது எந்த லக்னம் என்பதை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

மிதுன லக்னம் இந்த மிதுன லக்னக்காரர்களுக்கு குருபகவான் ஆனவர் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் இருக்கும் போது இந்த லக்கினக்காரர்களுக்கு அகண்ட சாம்ராஜ் யோகம் உருவாகும்.

சிம்ம லக்கின காரர்களுக்கு சிம்மம், விருச்சகம், கும்பம், ரிஷபம் ஆகிய இடங்களில் குரு பகவான் இருக்க வேண்டும் அது போன்ற சமயங்களில் இந்த யோகம் சிம்ம லக்கினக்காரர்களுக்கு உருவாகும்.

- Advertisement -

விருச்சக லக்னக்காரர்களுக்கு விருச்சகம் கும்பம் சிம்மம் ஆகிய ராசிகளில் ஏதாவது ஒரு இடத்தில் குரு பகவான் இருக்க வேண்டும். அந்த சமயத்தில் இந்த யோகம் உருவாகும்.

அதே போல் மீனம் லக்கினக்காரர்களுக்கு மேலும் மிதுனம், கன்னி, தனுசு ராசிகளில் ஏதாவது ஒரு இடத்தில் குரு பகவான் இருக்க வேண்டும். இப்படி இருக்கும் வேளையில் இந்த மீன லக்னம் காரர்களுக்கும் அகண்ட சாம்ராஜ் யோகம் உருவாகும்.

இந்த அகண்ட சாம்ராஜ் யோகம் உருவான லக்கின காரர்கள் தனாதிபதியாகவும், பாக்கிய அதிபதியாகவும் ஜாதகத்தில் உச்சம் பெற்று இருப்பார்கள். அது மட்டும் இன்றி இவர்கள் அடக்கி ஆளும் யோகம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: சனிபகவானுக்கு பிடித்த ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் கணிக்கப்பட்ட பொதுவான தகவல்களின்படி தொகுக்கப்பட்டது தான் பதிவு. அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப இதிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -