குருவால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிக்காரர்கள்

guru astrology
- Advertisement -

கிரகங்களில் மங்கல நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். அதுமட்டுமின்றி இவர் தேவர்களின் ராஜா குருவாகவும் திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அந்த ராசிக்காரர்கள் சகல விதமான யோகமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள். ஆகையால் தான் குரு பார்க்கின் கோடி நன்மை என்ற வார்த்தையே நம் வழக்கத்தில் உள்ளது.

அப்படியான குரு பகவானின் பெயர்ச்சியானது ஜாதகத்தில் மிக முக்கியமான காலமாக பார்க்கப்படுகிறது. இவர் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார் வரும் மே மாதத்தில் ரிஷப ராசிக்கு தன்னுடைய இடத்தை மாற்றிக் கொள்வார் அந்த வகையில் ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இவர் பயணம் செய்ய உள்ளார்.

- Advertisement -

இந்த நட்சத்திரத்தின் அதிபதி தெய்வமானவர் சூரிய பகவான் இந்த இருவரின் செயற்கையானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு மட்டும் ராஜ யோகத்தை கொடுக்கப் போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

மிதுன ராசி

குருபகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு சிறப்பான மாற்றங்களை தரப் போகிறது. பிறரிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். குருபகவானின் அருளால் தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும் இதன் மூலமும் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நண்பர்கள் சுற்றத்தார்கள் உதவியுடன் இருப்பார்கள்.

- Advertisement -

கடக ராசி

குருபகவானின் இந்த இடப்பெயர்ச்சியானது உங்களுக்கு பல நல்ல பலன்களை தரப் போகிறது. பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பாராத நேரத்தில் நிதி உதவி போன்றவை கிடைக்கும். அது மட்டும் இன்றி வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பண வரவு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு ராசி

குருபகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு பலவிதமான பயன்களை பெற்றுத் தரப் போகிறது. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மற்றொரு இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசியல் இருப்பவர்கள் நல்ல சூழ்நிலை அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுகூலங்கள் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் பிரயாணங்கள் செல்ல வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

- Advertisement -

குருவின் பெயர்ச்சியால் நன்மை அடையக் கூடிய மூன்று ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். மற்ற ராசிகளுக்கு எந்த பயனும் இல்லையா? என்றால் ஒரு பெயர்ச்சியின் மூலம் சில பலன்களை அனுபவிக்க கூடிய ராசிகள் தான் இவர்கள். தவிர ஒவ்வொருவரும் உழைப்பு முயற்சி ஏற்ற பலன்களை நிச்சயம் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: ஏப்ரல் மாதத்தில் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான தகவல்களின் தொகுக்கப்பட்டதையே இந்த பதிவு. இதில் அவரவர் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களும், ஏற்றங்களும் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -