ஏப்ரல் மாதத்தில் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்

puthan mahalakshmi
- Advertisement -

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகங்களின் நகர்வும் 12 ராசிகளுக்கும் பலவிதமான பலன்களை கொடுக்கும். இது சில நேரங்களில் சுப பலன்களாகவும், சில நேரங்களில் அசுப பலன்களாகவும் இருக்கும். அதே போல ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் ஒன்றாக இணையும் போது சில யோகங்கள் உருவாகும். அப்படி உருவான இரண்டு யோகத்தைப் பற்றியும் அதனால் அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிகள் பற்றியும் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிக்காரர்கள்

இந்த ஏப்ரல் மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சம் அடைந்து குருவுடன் இணைந்தால் புதாத்திய யோகமும், அதே போல் புதனும் சுக்கிரனும் இணைந்தால் லட்சுமி நாராயண யோகமும் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் சில ராசிகள் மட்டும் அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள். அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ரிஷப ராசி

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனும், புதனும் இணைவதால் அந்த ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் இவர்களுக்கு பல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்க உள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து லாபம் கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதே சமயத்தில் பணவரவும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் இது வரை இல்லாத முன்னேற்றத்தினை பெறலாம்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கும் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் புதிதாக தொழிலை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். நிதி ஆதாயங்கள் கிடைக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு ஏற்ற பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பொருளாதார நிலை மேம்படும்.

- Advertisement -

தனுசு ராசி

தனுசு ராசிக்கு சூரியன் மற்றும் ராசிநாதன் குருவின் சேர்க்கையால் புதாத்திய யோகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் பல அதிர்ஷ்டங்களும் நன்மைகளும் தேடி வரக் கூடிய யோகம் உண்டு. குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியும் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையும் நிலவும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். வீடு, மனை வாங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடலாம் நிச்சயம் வெற்றி கிட்டும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மகர ராசி

மகர ராசியில் சூரியன் குருவும் இணைவதால் புதாத்திய யோகம் ஏற்பட்டுபல மகிழ்ச்சிகளை அள்ளித் தரக்கூடிய யோகத்தை பெறுகிறார்கள். வீட்டிலும் பணி செய்யும் இடத்திலும் நல்ல செய்திகளும் மகிழ்ச்சியான சூழ்நிலையும் உருவாகும். தாய், தந்தை வழியில் இருந்து பல நன்மைகளை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம். வேலை செய்யும் இடத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் பொருளாதார நிலை மேம்படும்.

- Advertisement -

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு புதன் சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் வீட்டிலும் சமூகத்திலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் உதவியால் பல நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவைக்கு அதிகமான அலைச்சல் இருந்தாலும் அனைத்திலும் நிறைவான பலனையே பெறுவீர்கள் வியாபாரத்துறை தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவீர்கள் பொருளாதார நிலை பல மடங்கு உயரும்.

ஜோதிட சாஸ்திரத்தில் இது போல இரண்டு கிரகங்கள் இணையும் போது பல அதிர்ஷ்டகரமான யோகங்கள் உருவாகும் அந்த வகையில் புதாத்திய யோகம் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டகர்மான வாய்ப்புகளை பெறும் ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே: சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசிகள்

இதுவும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களில் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான். இதிலும் சில மாற்றங்களுக்கு வாய்ப்புண்டு என்ற கருத்தினை தெளிவுபடுத்திக் கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -