27 நட்சத்திரங்களுக்கான அதி தேவதைகள்

astrology
- Advertisement -

ஒருவரின் வாழ்வில் முக்கியமாக கருதப்படுவது நட்சத்திரங்கள் தான். இவைகளை வைத்து ஒருவரின் ஜாதகத்தை முழுவதுமாக கணித்து தீர்மானிக்க முடியும். கிரகங்கள் ஜாதகத்தில் முக்கியமான அங்கமாக இருந்தாலும் கூட கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் பலமும் உண்டு. ஆகையால் தான் ஜோதிடத்தில் ஜாதகத்தை கணிக்கும் போது நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது.

ஒருவருக்கு தன்னுடைய ராசியின் கிரக தேவதையும் கிரகத்திற்கான நட்சத்திர அதிதேவதைகளை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களுக்கான வழிபாடுகளை முறைப்படி செய்தால் அவர்கள் வாழ்வில் எட்ட முடியாத உயரத்தை எளிதில் அடைந்து விடலாம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கிறது. அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கான அதி தேவதைகள் யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

27 நட்சத்திரங்களுக்கான அதி தேவதை

உங்களுடைய நட்சத்திரங்களுக்கான அதி தேவதைகள் யார் எனவும் அந்த தேவதையலுக்கான ஆலய வழிபாடை குறித்தும் தெளிவாக அறிந்து கொண்டு அந்த வழிபாட்டை முறைப்படி செய்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் தொடர இருக்கும் பல்வேறு இடங்களில் இருந்து எளிமையாக வழி புரிய அவர்கள் நிச்சயம் துணை புரிவார்கள்.

27 நட்சத்திர தேவதை

1. அஸ்வினி – சரஸ்வதி தேவி
2. பரணி – துர்கா தேவி
3. கார்த்திகை – முருகப்பெருமான், அக்னி
4. ரோகிணி – கிருஷ்ணன், பிரம்மா
5. மிருகசீரிஷம் – சந்திரன்
6. திருவாதிரை – சிவபெருமான்
7. புனர்பூசம் – ராமர், அதிதி
8. பூசம் – பிரஹஸ்பதி, தட்சிணாமூர்த்தி
9. ஆயில்யம் – ஆதிசேஷன்
10. மகம் – சூரிய பகவான்

- Advertisement -

11. பூரம் – ஆண்டாள்
12. உத்திரம் – மகாலட்சுமி
13. அஸ்தம் – காயத்திரி தேவி
14. சித்திரை – சக்கரத்தாழ்வார்
15. சுவாதி – நரசிம்மமூர்த்தி
16. விசாகம் – முருகப்பெருமான்
17. அனுசம் – லட்சுமி நாராயணர்
18. கேட்டை – வராஹ பெருமாள்
19. மூலம் – ஆஞ்சநேயர்
20. பூராடம் – ஜம்புகேஸ்வரர்

21. உத்திராடம் – விநாயகப் பெருமான்
22. திருவோணம் – ஹயக்ரீவர்
23. அவிட்டம் – அனந்த சயனப் பெருமாள்
24. சதயம் – மிருத்யுஞ்ஜேஸ்வரர்
25. பூரட்டாதி – ஏகபாதர்
26. உத்திரட்டாதி – மகா ஈஸ்வரர்
27. ரேவதி – அரங்கநாதன்

இதையும் படிக்கலாமே: செவ்வாய் அள்ளி தர போகும் யோகம் யாருக்கு

இந்த ஜோதிடம் குறித்த பதிவில் உங்கள் நட்சத்திரக்கான அதி தேவதைகளை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் இந்த தகவல் உங்கள் வாழ்க்கையை ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த தேவதைகளின் வழிபாடுகளை முறைப்படி தெரிந்து கொண்டு செய்து வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழுங்கள் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -