செவ்வாய் அள்ளி தர போகும் யோகம் யாருக்கு

mars astrology
- Advertisement -

நவகிரகங்களின் இடமாற்றத்தை பொருத்தே ஒருவரின் ஜாதகம் அமைகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவானும் தன்னுடைய இடத்தை மாற்றுவதற்கு மிகக் குறுகிய காலமான 45 நாட்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறார். இவருடைய இந்த மாற்றமும் ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

நவகிரகங்களில் செவ்வாய் பகவானானவர் கிரகங்களின் தளபதியாக விளங்குகிறார். இவர் தைரியம், வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றிற்கெல்லாம் முக்கிய காரணகர்த்தாவாக விளங்குகிறார். தற்போது தனுசு ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகிறார். இதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் முழுவதும் தன்னுடைய பயணத்தை தனுசு ராசியில் தொடர உள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக 12 ராசிகளுக்கும் சில தாக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த தாக்கத்திலும் சில ராசிகள் ராஜ யோகத்தை பெறுகிறார்கள். அது எந்தெந்த ராசிகள். யார் அந்த யோகக்காரர்கள் என்பதை எல்லாம் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இருக்கின்ற காரணத்தால் உங்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுடன் இருப்பார்கள். நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் பெருகும். நல்ல வாய்ப்புகளும் வருமானங்களும் உங்களை தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டி தருவதோடு பொருளாதாரமும் மேம்படும்.

- Advertisement -

ரிஷப ராசி

உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் வீற்றிருக்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். சொத்து சம்பந்தமான சிக்கல்கள் அனைத்தும் தீரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல சூழ்நிலை உண்டாகும். இது வரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பணிசுமை குறையும் உங்களுடைய கடின உழைப்பு உங்களை மேலும் முன்னுக்கு கொண்டு வரும். பண வரவும் அதிகரிக்கும்.

மிதுன ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கிறார். இதனால் வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அதிகரிக்கும். வெளியூர் பிரயாணங்கள் தொடரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு லாபமும் முன்னேற்றமும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் ஏற்படும். அனைத்தையும் சுமுகமாக முடிக்கக் கூடிய காலக்கட்டம் இது.

- Advertisement -

கடக ராசி

உங்கள் ராசியில் ஆறாவது இடத்தில் செவ்வாய் பகவான் இருக்கிறார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல சூழ்நிலை உருவாகும். புதிய வேலை மாறுவதற்கான வாய்ப்புகளும் புதிய வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை உண்டாகும். கடன் வாங்கும் சூழ்நிலை இன்றி வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கருப்பு கயிறு கட்டக் கூடாத ராசிகள்

இந்த பதிவில் உள்ள தகவல்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அவரவர் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப இதிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்ற இந்த கருத்தினை தெரிவித்துக் கொள்வதோடு பதிவினையும் முடிவு செய்து கொள்வோம்.

- Advertisement -