வருடத்தில் இந்த இரண்டு நாட்களில் கண்களை மூடிக்கொண்டு நல்ல காரியங்களை செய்யலாம். நம் வாழ்க்கையில் நிறைய லாபங்கள் கிடைக்க வேண்டும், நிறைய பணம் வர வேண்டும் என்றால், புது விஷயங்களை இந்த 2 நாட்களில் துவங்கலாம். ஒன்று விஜயதசமி நாள். இன்னொன்று அட்சய திருதியை. உங்களுக்கு எந்தெந்த விஷயங்கள் எல்லாம் அபரிவிதமாக வளர்ச்சியை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை எல்லாம் இந்த அட்சய திருதியை நாளில் நீங்கள் செய்யலாம்.
நீங்கள் தொட்ட காரியம் பல மடங்காக விருத்தி அடையும். வெற்றி அடையும். நிறைய நஷ்டங்களில் இருந்து நம்மை வெளியில் மீட்டுக் கொண்டு வரக்கூடிய திதி இந்த அட்சய திருதியை. இந்த நாளில் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால், அதை அழித்து விடுங்கள். தங்கம் தவிர நாம் செய்யக்கூடிய இன்னும் சில விஷயங்களும் நம்முடைய வாழ்க்கையில் அதி அற்புதமான நல்ல பலனை கொடுக்கும். அந்த விஷயங்கள் எல்லாம் என்னென்ன.
நாளைய தினம் 30-04-2025 அட்சய திருதியை அன்று நாம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு சில முக்கியமான விஷயங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். கூடவே நிறைய செல்வ வளத்தை பெறுவதற்கு சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரத்தையும் தெரிந்து கொள்ள போகின்றோம். பின் சொல்லக்கூடிய எல்லா விஷயங்களையும் ஒரு மனிதன் நாளை கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களால் எது முடிகிறதோ இதில் ஒன்று இரண்டை செய்தாலே போதும். நல்லது உங்கள் வீடு தேடி வரும்.
அட்சய திருதியை அன்று கட்டாயம் ஒருவர் செய்ய வேண்டிய விஷயம் தானம். உங்களால் எந்த பொருளை வாங்கி இயலாதவர்களுக்கு தானம் கொடுக்க முடியுமோ, கொடுத்து விடுங்கள். அக்ஷய திருதியை அன்று நீங்கள் தானம் கொடுத்தால் இந்த வருடம் முழுவதும் நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்கும் இடத்தில் இருப்பீர்கள். அடுத்தவர்களிடம் கை நீட்டும் அளவிற்கு உங்களுடைய நிலைமை போகாது.
பழச்சாறு, பழகங்கள், ஒரு வாரத்திற்கு தேவையான மல்லிகை பொருட்கள், செருப்பு, குடை, இதுபோல பொருட்களை வாங்கி இயலாத ஒருவருக்கேனும் தானம் கொடுக்கலாம். வெயில் காலத்தில் நீர்மோர் கூட அக்ஷய திருதியை அன்று தானம் கொடுக்கலாம். கரும்புச்சாறு வாங்கி தானம் கொடுக்கலாம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் வாங்கி தானம் கொடுக்கலாம்.
நாளைய தினம் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை நீங்களும் சாப்பிடலாம். இந்த தானங்களை செய்யும்போது உங்களுடைய வீட்டில் பொன் பொருள் தன தானிய சேர்க்கை அதிகரித்து, மேலும் மேலும் தானம் செய்யக்கூடிய வாய்ப்புகளையும், புண்ணியத்தையும் உங்களுக்கு சேர்க்கும். இது முதல் விஷயம்.
இரண்டாவதாக அட்சய திருதியை அன்று புதுசாக சுப காரியங்களை துவங்கலாம். உங்களுக்கு எந்த விஷயங்களை புதுசாக இப்போது துவங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அட்சய திருதியை அன்று துவங்கலாம். புது தொழில் துவங்குவது, புதுசாக ஏதாவது வேலை ஆரம்பிப்பது, இன்றைய நாளில் நீங்கள் செய்யும் புது ஆரம்பம் அபரிவிதமான விருத்தியை கொடுக்கும்.
அபரிமிதமான விதமான லாபத்தையும் கொடுக்கும். புதுசாக இன்றிலிருந்து ஒரு மந்திரத்தை சொல்ல துவங்கலாம். புதுசாக இன்றிலிருந்து வாழ்க்கையில் முன்னேற ஒரு உறுதி மொழியை மேற்கொள்ளலாம் இதுபோல நல்ல விஷயங்களை என்று துவங்குங்கள் அது தடைபடாமல் இருக்கும்.
அட்சய திருதியை அன்று வீட்டிற்கு தேவையான உபயோகமுள்ள பொருட்களை வாங்கலாம். இப்போது உங்களுடைய வீட்டில் தேவைக்கு ஏற்ப ஏசி வாங்கணும் அப்படி இல்லை என்றால் சமையலறைக்கு மிக்ஸி வாங்கணும். கிரைண்டர் வாங்கணும் இதுபோல அத்தியாவசிய தேவைகளுக்கு பொருள் வாங்கக்கூடிய சூழ்நிலை இருந்தால், அதற்காக இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவை இருந்தால் மட்டும் அநாவசிய செலவு எந்த நாளிலும் நாம் செய்யக்கூடாது.
உங்களுடைய வீட்டில் திருமணம் வைத்திருக்கிறீர்கள். சுப முகூர்த்தப்பட்டு வாங்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டும், வெள்ளி வாங்க வேண்டும், மெட்டி வாங்க வேண்டும் என்றால் அந்த மங்களகரமான பொருட்களை இந்த அக்ஷய திருதியை நாளில் வாங்கலாம். தவிர கட்டாயம் கடன் வாங்கித் தான் தங்கம் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
சொல்லப்போனால் கடன் வாங்கி அட்சய தினத்தில் தங்கம் வாங்கினால் அது உங்களுக்கு நிச்சயம் பெரிய அளவில் லாபத்தை கொடுக்காது. கஷ்டத்தை கொடுக்கும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அட்சய திருதியை அன்று முக்கியமாக கடன் வாங்க கூடாது அடுத்தடுத்து கடன் பெருக துவங்கிவிடும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அட்சய திருதியை அன்று சிவன் கோவிலுக்கு சுத்தமான மஞ்சள் தூள் அல்லது மஞ்சள் கிழங்கு வாங்கி தானம் கொடுப்பது சிறப்பான பலனைத் தரும். சுவாமிக்கு மஞ்சள் நிற பூக்களையும் வாங்கி தானமாக கொடுக்கலாம். அக்ஷய திருதியை அன்று வீட்டிற்கு பயன்படுத்தும் மஞ்சள், கல் உப்பு, பச்சரிசி,துவரம் பருப்பு இதுபோல மளிகை பொருட்களை வாங்கினாலும் நன்மையை தரும். வெள்ளை நிற மல்லிகைப் பூவை அக்ஷய திருதியை அன்று வாங்குவது சிறப்பு.
இதெல்லாம் எங்களுக்கும் தெரியும். அக்ஷய திருதியை அன்று என்ன மந்திரம் சொல்வது. மகாலட்சுமியின் கடைக்கண்பார்வை நம் மீது விழுவதற்கு சொல்ல வேண்டிய அந்த ரகசிய மந்திரத்தை இப்போது தெரிந்து கொள்வோமா.
அட்சய திருதியை மந்திரம்
“ஓம் லக்ஷ்மி தேவி மாம் சரணம் சரணம் பிரபத்யே”
அட்சய திருதியை அன்று 27 முறை இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள் மனதிற்குள் அத்தனை சந்தோஷங்கள் கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். அக்ஷய திருதியை அன்று இந்த மந்திரத்தை சொல்ல துவங்க வேண்டும். அடுத்தடுத்த நாட்களிலும் விடாமல் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.
ஒருவேளை உங்களுக்கு தைரியம் வேண்டும் என்றால் அந்த மந்திரத்தில் லட்சுமி என்ற வார்த்தையை எடுத்து விட்டு துர்க்கை என்ற வார்த்தையை சேர்த்து இந்த மந்திரத்தை சொல்லலாம். “ஓம் துர்கா தேவி மாம் சரணம் சரணம் பிரபத்யே” கோழையாக இருப்பவர்களுக்கு தைரியம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வெற்றிலை பரிகாரம்
அதே போல பிள்ளைகளுக்கு படிப்பு தேவை என்றால், “ஓம் சரஸ்வதி தேவி மாம் சரணம் பிரபத்யே” இப்படி கூட இந்த மாதிரி மந்திரத்தை மாற்றி செல்லலாம். இதுபோல உங்களுடைய வாழ்க்கையில் என்ன வளம் அதிகமாக உங்களுக்கு தேவைப்படுகிறது. அந்த வளத்தை, வரமாக கேட்க இந்த ஒரு மந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அட்சய திருதியை அன்று இப்படி ஒரு நல்ல விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.