அட்சய திருதியை நாளில் எந்த ராசிக்காரர் என்ன செய்தால் அதிஷ்டம் பெருகும்

atchaya thiruthiyai rasi

நாம் எவ்வளவோ தானம் செய்தாலும் அட்சய திருதியை நாளில் செய்யும் தானத்திற்கு அதிக பலன் உண்டு. அதே போல நாம் அட்சய திருதியை நாளில் புதிய பொருட்களை வாங்கினால் வீட்டில் பொருட்கள் சேரும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த அட்சய திருதியையில் எந்த ராசிக்காரர்கள் என்ன பொருளை வாங்கினால் அதிஷ்டம் சேரும், என்ன தானம் செய்தால் நன்மை பெருகும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
Mesham Rasiமேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த அட்சய திருதியை நாளில் புதிய ஆடைகள் வாங்குவது நல்லது. அதோடு வீட்டிற்கு தேவையான உணவு பொருட்களையும் வாங்கலாம். அதோடு இன்று நீங்கள் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது, கொள்ளு தானாம் செய்வது போன்ற செயல்களால் அதிஷ்டம் உங்களை தேடி வரும்.

ரிஷபம்:
Rishabam Rasiரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இம்போர்ட்டட் ப்ராடெக்ட்ஸ் என்று சொல்லக்கூடிய வெளிநாட்டில் தயாரிக்க பட்டு இங்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவது நல்லது. அது ஒரு சிறிய சென்ட் பாட்டிலாக கூட இருக்கலாம். அதோடு நீங்கள் இன்று கோதுமையால் செய்யப்பட்டன உணவுகளை தானம் செய்வது உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

மிதுனம்:
Mithunam Rasiமிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை தங்களது ரசனைக்கு ஏற்ப வீட்டை அழகு படுத்தக்கூடிய எந்த பொருளாக இருந்தாலும் அதை இன்று வாங்குவது நல்லது. அதோடு பசியால் வாடும் ஏழைகளுக்கு பச்சரிசியால் செய்யப்பட்ட ஏதேனும் பண்டங்களை தானம் செய்வதன் மூலம் அதிஷ்டம் பெருகும்.

கடகம்:
Kadagam Rasiகடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஏதாவது ஒரு சிறிய இயந்திரமாவது வாங்குவது நல்லது. வசதி படைத்தவர்கள் இரு சக்கர வாகனம் போன்றவற்றை கூட வாங்கலாம். அதோடு இன்று நீங்கள் கோவிலில் விளக்கெரிவதற்கான எண்ணெய், நெய் போன்றவற்றை கொடுக்கலாம். எண்ணெயால் செய்யப்பட்ட பலகாரங்களை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தொழிலுக்கு உதவும் ஏதாவது ஒரு பொருளை வாங்கலாம். அது ஒரு சிறிய பேனாவாக கூட இருக்கலாம். அதோடு இன்று நீங்கள் சரியான ஆடைகள் இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக அளிப்பது நல்லது.

- Advertisement -

கன்னி:
Kanni Rasiகன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புத்தாடைகளை வாங்கலாம். அதோடு நீங்கள் கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருட்களை பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு இன்று தானம் அளிப்பது நல்லது. இதன் மூலம் உங்கள் குறைகள் நீங்கி அதிஷ்டம் பெருகும்.

துலாம்:
Thulam Rasiதுலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரும்பு சம்மந்தமான ஏதாவது ஒரு பொருளை வாங்குவது நல்லது. அதோடு பாய் தலையணையை கூட வாங்க வசதி இல்லாத ஏழைகளுக்கு பாய் மற்றும் தலையணையை தானம் செய்வது நல்லது. இதன் மூலம் உங்களுக்கு அதிஷ்டம் பெருகும்.

விருச்சிகம்:
Virichigam Rasiவிருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பூஜை அறைக்கு தேவையான பொருட்கள் வாங்குவது நல்லது. அது கற்பூரம், ஊதுபத்தி போன்ற சிறிய பொருட்களாக கூட இருக்கலாம். அதோடு இன்று நீங்கள் திருமணமாகாத ஏழை பெண்களின் திருமண செலவிற்கு உங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை தானமாக வழங்குவது உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

தனுசு:
Dhanusu Rasiதனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் அல்லது பெண்களுக்கு தேவையான ஏதோ ஒரு பொருளை வாங்கி தருவதன் மூலம் உங்கள் வாழ்வில் சுபிட்சம் பெருகும். அதோடு நீங்கள் எள்ளால் செய்யப்பட்ட ஏதுனும் ஒரு பலகாரத்தை ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.

மகரம்:
Magaram rasiமகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரும்பு மற்றும் எண்ணெய் சம்மந்தமான பொருட்களை வாங்குவது நன்மை சேர்க்கும். இன்று பசுநெய்யை கோவிலிருக்கு கொடுப்பது நல்லது. அதோடு நெய்யால் செய்யப்பட்ட பலகாரங்களை ஏழைகளுக்கு தானமாக வழங்குவது நன்மையை தரும்.

கும்பம்:
Kumbam Rasiகும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெய்வீகம் சம்மந்தமான ஏதோ ஒரு பொருளை வாங்குவது நல்லது. அது ஒரு மந்திர புத்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு கற்பூரமாக கூட இருக்கலாம். அதோடு நீங்கள் இன்று எள்ளால் செய்யப்பட்ட ஏதோ ஒன்றை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பது அதிஷ்டத்தை சேர்க்கும்.

மீனம்:
Meenam Rasiமீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை வாங்குவது நல்லது. அதோடு இன்று நீங்கள் கோதுமையால் செய்யப்பட்ட ஏதோ ஒன்றை ஏழைகளுக்கு தானமாக வழங்குவது உங்களுக்கு நன்மையை தரும்.