நாளை காலை அட்சய திதி! ஊரடங்கு காரணமாக, கடைக்கு சென்று, கல்லுப்பு வாங்க முடியாதவர்கள் லட்சுமிதேவியின் ஆசீர்வாதத்தை பெற என்ன செய்வது?

atchaya-thiruthiyai-salt
- Advertisement -

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் கூட, கல் உப்பை வாங்கி மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை இந்த அட்சய திதி நாளுக்கு உள்ளது. ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டு இருக்கும் சில இடங்களில் உள்ளவர்கள், வீட்டை விட்டு கடைக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படிப்பட்டவர்கள் அட்சயதிதி அன்று மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு என்ன செய்யலாம்! என்ற ஒரு சின்ன குறிப்பை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

atchaya-thiruthiyai

நாளை காலை வெளியே சென்று உப்பு வாங்க முடியாதவர்கள், இன்று இரவு உங்கள் வீட்டில் இருக்கும் கல்லுபையோ அல்லது தூள் உப்பையோ எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து, உங்கள் வீட்டு வாசலுக்கு வெளியில் வைத்து விடுங்கள். இன்று இரவே இதை செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், எழுந்து வீட்டில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்பு வெளியே வைத்திருக்கும் அந்த உப்பு மூட்டையை எடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, மகாலட்சுமியை வேண்டி ‘ஓம் மகாலட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு, அந்த உப்பிலிருந்து சிறிதளவு உப்பை சமையலுக்காக அன்றைய தினமே பயன்படுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

salt

புதியதாக உப்பு வாங்க முடியவில்லையே என்ற வருத்தம் யாருக்கும் வரவேண்டாம். இந்த முறையில் உப்பை வைத்து மகாலட்சுமியை வணங்கி, அந்த உப்பினால் செய்யப்பட்ட சாதத்தை உங்களால் முடிந்தால் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். வெளியில் சென்று தானமளிக்க முடியாதவர்கள், அந்த சாதத்தை வாயில்லா ஜீவன்களுக்கு கொடுப்பதில் கூட அதிகப்படியான புண்ணியம் அடங்கியுள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களது வீட்டு அருகில் இருக்கும் எறும்புகள் அந்த சாதத்தை சாப்பிட்டாலும் கூட அது நீங்கள் தானம் செய்த புண்ணியத்தை உங்களுக்கு தேடித்தரும். வீதியில் இருக்கும் நாய்களுக்கு உங்களால் முடிந்த பிஸ்கட்டுகளை தந்தாலும் அது தான பட்டியலில்தான் அடங்கும். வெளியில் செல்ல முடியாத காரணத்தினால் இந்த அட்சய திருதியை முறையாக கொண்டாடப்பட முடியவில்லையே, என்ற ஒரு சின்ன வருத்தம் கூட யார் மனதிலும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு.

Atchaya thiruthiyai

ஏனென்றால் நமக்கு இருக்கும் சூழ்நிலையும், பொருளாதார பிரச்சினையும் இன்னும் மோசமாகிக் கொண்டே இருக்கும் அளவிற்கு சூழ்நிலை நிலவிவருகிறது. இந்த சூழ்நிலையில் நம்முடைய வாழ்க்கை இன்று மாறி விடாதா, நாளை மாறி விழாதா என்று எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் நபர்களுக்கு மகாலட்சுமியை இந்த ஆட்சியைதிதியில் வழிபட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உப்பு கூட வாங்க முடியவில்லையே! என்ற வருத்தத்தோடு பூஜை செய்தால் அது நிறைவடையாது. அதாவது மனத் திருப்தியோடு செய்யப்படும் பூஜை தான் இறைவனின் பாதங்களை சென்றடையும். மன குழப்பம் இல்லாமல் இந்த அட்சய திதியை உங்கள் வீட்டில் கொண்டாட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
நாளை அட்சய திரிதியை! ஏற்ற வேண்டிய தீபமும், செய்ய வேண்டிய தானமும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Atchaya thiruthiyai 2020 in Tamil. Atchaya thiruthi. Atchaya thiruthi pujai. Atchaya tritiya in Tamil. Akshaya tritiya Salt Tamil.

- Advertisement -