நாளை அட்சய திரிதியை! ஏற்ற வேண்டிய தீபமும், செய்ய வேண்டிய தானமும்.

atchaya-thiruthiyai-deepam

வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க நாளை வரகூடிய அட்சய திதி அன்று வீட்டில் குபேரரரையும், லட்சுமியையும் நினைத்து மஞ்சள் தீபம் ஏற்றவேண்டும். அந்த மஞ்சள் தீபத்தை எந்த நேரத்தில், எப்படி ஏற்றுவது என்பதை பற்றியும், நாம் செய்யவேண்டிய முக்கியமான தானத்தை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த தினத்தில் நாம் செய்யும் எந்த ஒரு புண்ணிய காரியத்திற்க்கும், பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kubera deepam

பிரம்ம முகூர்த்த வேலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, முதலில் பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைக்கவேண்டும். எல்லா பண்டிகைகும் பிரம்மமுகூர்த்தம் தானா! என்ற சலிப்பு யாருக்கும் வந்துவிட வேண்டாம். பிரம்ம முகூர்த்தத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிபாட்டிற்கும் உடனடி பலன் கிடைக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சரி. நாளை அட்சய திதி அன்று பிரம்ம முகூர்த்த வேளையிலோ, முடிந்தவரை சூரியன் உதயமாவதற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பு, வீட்டு நிலை வாசல் படிக்கு வெளிப்பக்கத்தில் இந்த குபேர மஞ்சள் தீபத்தை ஏற்ற வேண்டும்.

சுத்தமான சிறிய அளவில் இருக்கும் தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு, அந்தத் தட்டில் சிறிது மஞ்சள்தூளை கொட்டி, அதன் மேல் உங்கள் வீட்டில் என்ன தீபம் இருக்கிறதோ (மண் அகல் தீபமாக இருந்தாலும் நல்லது.) அதை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. உங்கள் வீட்டில் குபேரர் விலக்கு இருந்தால், அந்த விளக்கில் நாளை தீபமேற்றுவது இன்னும் சிறப்புமிக்க ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

manjal-pillaiyar

அட்சயதிதி அன்று காலை ஏற்றப்படும் தீபத்தின் மூலம் நம் வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இன்றும் வட மாநிலத்தவர்கள் இந்த முறையை, வருடம் தவறாமல் பின்பற்றி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தீபத்திற்கு அடியில் வைத்திருக்கும் மஞ்சளை, எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வைத்து பூஜித்த பின்பு, அடுத்த நாள் காலை அந்த மஞ்சள் பிள்ளையாரை, தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுவது நல்லது.

curd

இதேபோல் அட்சயதிதி அன்று தயிர் சாதம் செய்து உங்களால் முடிந்த வரை ஏழைகளுக்கு தானம் செய்தால் அதன் புண்ணியம் பல மடங்காகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த வருடம் வரும் அட்சய திரிதியை, சுலபமான முறையில், தங்கம் வாங்க முடியாவிட்டாலும், அதைவிட பல மடங்கு பலன் தரும் புண்ணிய காரியங்களை செய்வதன் மூலம் நம்மால் முழுமையான பலனை பெற முடியும் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு, அனைவரும் சிறப்பாக, குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
குறிப்பிட்ட இந்த வேலைகளை தாமதிக்காமல், உடனுக்குடன் செய்யும் பெண்களா நீங்கள்! வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிப்பீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Akshaya tritiya valipadu. Atchaya thiruthi pujai. Atchaya tritiya in Tamil. Akshaya thiruthiyai Tamil. Akshaya tritiya benefits.