- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிசக்தி வாய்ந்த ஹனுமன் மகாமந்திரம்

அதிசக்தி வாய்ந்த ஹனுமன் மகாமந்திரம்

- Advertisement -

கஷ்டமே வராமல் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதை விட, கஷ்டம் வந்தால் அந்த கஷ்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லித் தாருங்கள். பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே கஷ்டப்படாமல் வளரவேண்டும் என்று பெற்றவர்கள் ஆசைப்படக்கூடாது. பிள்ளைகளுக்கு கஷ்டம் வர வேண்டும்.

கஷ்டம் வந்தாலும், பிள்ளைகள் அந்த கஷ்டத்தை எதிர்கொண்டால் மட்டுமே, எதிர்காலத்தில் வாழ்க்கையில் போராடக் கூடிய பக்குவம் அவர்களுக்கு வரும். சிறுவயதில் கஷ்டமே இல்லாமல் வாழ்ந்து விட்டு, பெரியதாக வளர்ந்த பிறகு, ஒரு கஷ்டத்தை எதிர்கொள்ளும் போது அவர்கள் நிலை தடுமாறி நிலை குலைந்து போகிறார்கள். ஆகவே பிள்ளைகளுக்கு கல்வி பாடத்தோடு சேர்த்து, அனுபவ பாடங்களையும், தைரியமான விஷயங்களில் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இதுவே பெற்றவர்களின் கடமை.

- Advertisement -

சிலபேர் வாழ்க்கையில், சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு விடுவார்கள், அவர்களுக்கு சந்தோஷம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது. இப்படி கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு ஒரு சூழ்நிலையில் தன்னுடைய வாழ்க்கையில், பெரிய வெறுப்பே வந்துவிடும். இதற்கு மேல் வாழ்வது பிரயோஜனம் இல்லை, என்ற ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். உங்களுடைய வாழ்க்கையில் வரக்கூடிய பெரிய பெரிய துன்பங்களில் இருந்து, இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்றால், என்ன செய்வது.

இதுபோல கஷ்டங்களிலிருந்து விடுபட சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது என்று சொல்லுவார்கள். சில பேரால் சுந்தரகாண்டத்தை முழுமையாக படிக்க முடியாது. சுந்தரகாண்டத்தில் வரும் ஒரு எளிமையான 4 வரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினம்தோறும் படித்தாலே உங்களுடைய இருள் சூழ்ந்த வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கும். மன தைரியம் கிடைக்கும்.

- Advertisement -

இக்கட்டான சூழ்நிலையில் கூட எப்படியும் அந்த சூழ்நிலையை கடந்து விடலாம் என்ற பக்குவத்திற்கு நீங்கள் வருவீர்கள். அப்படிப்பட்ட அந்த மந்திரத்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் மரணம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகிமை வாய்ந்த மஹா மந்திரம்

நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய
தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை
நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக
நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்ய:

இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யம் பெருக விநாயகர் வழிபாடு

தினம் தினம் இந்த மந்திரத்தை சொல்லலாம், அல்லது வாரத்தில் இரண்டு நாள், வியாழக்கிழமை சனிக்கிழமை இந்த மந்திரத்தை சொல்லலாம். உங்களுடைய விருப்பம் தான். வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று விரக்தி ஆகக்கூடிய சமயத்தில் உங்களுடைய மனது எதையெதையோ சிந்திக்கும். அந்த சமயத்தில் அனுமனை, ஸ்ரீ ராமரையும் மனதில் நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கை நல்லபடியாக மாறிவிடும்.

சற்று முன்