அத்தி வரதர் வைபவத்தில் இத்தனை கோடிகள் வருமானமா? – பக்தர்கள் அதிர்ச்சி

athi-varadhar
- Advertisement -

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதர், 2019, ஜூன் 28-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் வெளியே கொண்டுவரப்பட்டார். ஜூலை 1-ம் தேதியிலிருந்து வசந்த மண்டபத்தில் மக்களுக்கு தரிசனம் அளித்துவந்தார். கடந்த 1979 ஆம் ஆண்டிக்கு பிறகு நடைபெறும் இந்த வைபவம் இம்முறை மிகப்பெரிய அளவில் பக்தர்களின் வரவேற்பைப் பெற்று, ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் 48 நாட்கள் அத்தி வரதர் தரிசனம் முடிவடைந்தது. அத்தி வரதர் வைபவம் தொடங்கிய சில தினங்களில் வி.வி.ஐ.பி வரிசையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் சுவாமியை தரிசனம் செய்தது பக்தர்களின் வரிசையை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கடுமையாக திட்டிய காணொளி காட்சிகள் என அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தின. இவையனைத்தையும் விட அத்தி வரதர் தரிசன வைபவத்தில் பணம் தொடர்பான முறைகேடுகள் தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

athi vardhar

அத்தி வரதர் தரிசனம் தொடங்கியது முதலே பல முறைகேடுகள் கோயிலுக்குள்ளாகவும், கோயிலுக்கு வெளியிலும் நடைபெற்றதாக அந்த ஊரில் வசிக்கின்ற பக்தர்கள் கூறுகின்றனர். இது பற்றி அவர்கள் கூறும் போது. வைபவத்தின் முதல் நாளான ஜூலை 1-ம் தேதி மட்டும் ஒரு லட்சம் பேர் தரிசித்த நிலையில், அதற்கடுத்த தினங்களில் ஒரு நாளைக்கு வெறும் 15,000 பேர் மட்டுமே அத்தி வரதர் தரிசனம் செய்தனர். இரண்டாவது வாரத்திலிருந்து தான் அத்தி வரதரை காண பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. ஆனால் அத்தனை மக்களுக்கேற்ற கழிவறை, குடிநீர் வசதிகள் அப்போது வரை ஏற்படுத்தப்படவில்லை. இந்த வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய 29 கோடி ரூபாயில் மாவட்ட நிர்வாகம் அப்படி என்ன தான் செய்தார்கள் என இன்று வரை கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

- Advertisement -

மேலும் பட்டு துணிகள் விற்பனைக்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சில முன்னணி ஜவுளி நிறுவனங்கள் தான் வி.ஐ.பி பாஸ்களை ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்த்தன. அதாவது 10,000 ரூபாய்க்கு புடவை வாங்கினால், பாஸ் இலவசம்’ என்ற மறைமுகச் சலுகையால், இந்த 47 நாளில் மட்டும் ரூபாய் 200 கோடிக்கும் குறையாமல் மூன்று நிறுவனங்களும் பெருமளவில் லாபங்களை ஈட்டிவிட்டாதாக கூறுகிறார்கள்.

Athi-Varadar-Kanchi

வி.வி.ஐ.பி., வி.ஐ.பி., உபயதாரர் என மூன்று வகையான பாஸ்கள் மாவட்ட நிர்வாகத்தால் விநியோகிக்கப்பட்டன. இவை ஒரு நாளைக்கு எவ்வளவு, யாருக்கு விநியோகிக்கப்பட்டன என்கிற கணக்கு சரிவர எழுதப்படவில்லை. ஒரு வி.ஐ.பி பாஸ் 10,000 ரூபாய் என்றாலும், அதை வாங்குவதற்கு வெளிமாநில பக்தர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களுக்கு இந்த பாஸ்களை விற்பதற்கு அதிகாரத்தில் இருந்த பலரே ப்ரோக்கர்களை போன்று செயல்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரு நாளைக்கு பாஸ் விநியோகத்தில் மட்டுமே சுமார் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே சம்பாதித்துள்ளனர் என்கின்ற செய்தி அனைவருக்குமே அதிர்ச்சி தருகிறது.

- Advertisement -

people

மேலும் அத்திவரதருக்கு முன்னே அமரவைப்பதற்கு 50,000 ரூபாய், வரதர் சிலைக்கு அருகில் நிற்பதற்கு 30,000 ரூபாய், அத்திவரதர் கழுத்தில் உள்ள மாலைக்கு 20,000 ரூபாய், போட்டோ எடுத்துக்கொள்ள 10,000 ரூபாய் என்கிற வகையில் பல கோடி ரூபாய் வசூலாகி அதற்கான கணக்கு என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. பக்தர்கள் செல்லும் வரிசையில், போதிய அளவில் உண்டியல்கள் வைக்கப்படாததால். பக்தர்கள் காணிக்கையை பட்டர்கள் வைத்திருக்கும் தட்டில் மட்டுமே செலுத்தும்படியான நிலையே இருந்தது. காணிக்கையாக மட்டுமே 100 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையில் தாராளமாகச் செலுத்தப்பட்டது. பல பக்தர்கள், நகைகளை வழங்கினர். அவையெல்லாம் பெருமாளுக்குச் சமர்பிக்கப்பட்டதா அல்லது கோயில் ஊழியர்களே பதுக்கிக் கொண்டனரா? என்கிற கேள்வி பக்தர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:
நீருக்குள் அத்தி வரதர் சிலை கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar accountability in Tamil. It is also called Athi varadhar in Tamil or Athi varadhar festival in Tamil or Athi varadhar vizha in Tamil.

- Advertisement -