அத்தி வரதர் தரிசன விழா காலத்தை நீட்டிக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு

athi-varadhar

திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை புரிவது என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம் ஆகும். ஆனால் கடந்த ஒன்றரை மாதமாக திருப்பதி கோவிலை காட்டிலும் ஒரு நாளில் பல மடங்கு அதிகமாக பக்தர்கள் வருகின்ற ஒரு கோவிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மாறியுள்ளது. இதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுகின்ற அத்தி வரதர் தரிசன விழாவாகும். அத்தகைய அத்தி வரதர் தரிசனம் பற்றிய ஒரு முக்கிய தகவலை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

varadharaja perumal

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுகின்ற ஒரு அபூர்வ ஆன்மீக விழாவாக அத்தி வரதர் வைபவ விழா திகழ்கிறது. கடந்த 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போதைய 2019 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் ஒன்றாம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை அத்தி வரதர் தரிசனம் நடைபெறும் என ஏற்கனவே கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய அபூர்வ அத்தி வரதர் தரிசனம் காண ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதலே தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் காஞ்சிபுரம் நகரம் வந்து அத்தி வரதர் தரிசனம் பெற்று செல்கின்றனர்.

அத்திவரதர் தரிசனத்தை காண தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் காண வந்த வண்ணம் இருப்பதால், காஞ்சிபுரம் நகரம் முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்திருப்பது தினந்தோறும் காணக் கிடைக்கின்ற காட்சியாக இருக்கிறது.

அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு வரிசையில் நிற்கும் பக்தர்கள் பலரும் குறைந்தது 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நிற்க வேண்டியிருக்கிறது. ஊனமுற்றோர் மற்றும் வயதானவர்கள் போன்றோருக்கு சீக்கிரம் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு தனி வரிசைகள் ஏற்படுத்தப்பட்டாலும், அனைவராலும் இந்த 48 நாட்கள் காலவரையறைக்குள்ளாக காஞ்சிபுரம் கோவிலுக்கு வந்து தரிசனம் அத்தி வரதர் செய்ய முடியாத நிலை இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் அனைவரும் எளிதாக அத்தி வரதர் தரிசனம் செய்யும் வகையில், அத்தி வரதர் வைபவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மனுவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியிடம் அளித்திருக்கிறார். இந்தக் கோரிக்கை மனுவை முறையீட்டு மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அது குறித்த விசாரணையை நீதிமன்றம் மேற்கொள்ளும் என நீதிபதி அந்த வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கினார்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கச் செய்யும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar court petition in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar temple in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.