அத்தி வரதர் தரிசன டிக்கெட் குறித்த அரசின் முக்கிய அறிவிப்பு இதோ

Athivarathar
- Advertisement -

1000 கோயில்களின் நகரம் காஞ்சிபுரம் என்பது அனைவரும் அறிந்தது தான். சைவ, வைணவ, பௌத்த, சமண சமயங்களின் கோயில்கள் நிறைந்த ஒரு ஆன்மீகபுரியாக காஞ்சிபுரம் இருக்கிறது. அத்தகைய அற்புதமான நகரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ நிகழ்வாக காஞ்சி அத்தி வரதர் தரிசன வைபவம் இருக்கிறது. அந்த அற்புத ஆன்மீக நிகழ்வை குறித்து கோயில் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 வரை அத்தி வரதர் தரிசன உற்சவம் நடைபெற்றுவருகிறது இது வரையில் மொத்தம் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம் செய்துள்ளதாக காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலிருந்து வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

- Advertisement -

பெருவாரியான பக்தர்கள் அத்திவாரதர் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கில் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலுக்கு வருவதால் தரிசனத்திற்காக பக்தர்கள் நிற்கின்ற வரிசையில் அதிகளவு கூட்டநெரிசல் உண்டாவதோடு அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகும் நிலையும் ஏற்படுகிறது. பொதுமக்கள் தரிசனம் செய்ய இலவச தரிசன வழி மட்டுமல்லாது அத்தி வரதரை விரைவாக தரிசிக்க தரிசன டிக்கெட், சிறப்பு தரிசன டிக்கெட், நன்கொடை தரிசன பாஸ், வி.ஐ.பி தரிசன வழி, வி.வி.ஐ.பி தரிசனம் என பல வழிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று ஊடகத்தினரை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் நன்கொடை சிறப்பு தரிசன பாஸ் பக்தர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தார் இதை பற்றி ஆட்சியர் விரிவான விளக்கியது என்னவென்றால் அத்தி வரதர் வைபவ நன்கொடை சிறப்பு அனுமதி சீட்டு தேவையான நபர்களுக்கு, தேவைக்கும் அதிகமான அளவில் வழங்கப்பட்டு முழுவதும் தீர்ந்துவிட்டதால் 09.08. 2019 முதல் மேற்கொண்டு எந்த விதமான நன்கொடை மற்றும் சிறப்பு அனுமதி சீட்டுகளும் வழங்கப்படமாட்டாது என உறுதியாக அறிவித்தார்.

- Advertisement -

people

இதற்கு மேலும் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நன்கொடை மற்றும் சிறப்பு அனுமதி சீட்டு கோரி எவரும் அனுகி தொந்தரவு தரக்கூடாது எனவும் மீறினால் அபராதம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு காஞ்சிபுரம் நகரம் முழுவதும் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாமே:
அனைவருக்கும் நன்மை தரும் அத்தி வரதர்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar dharsan ticket in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar dharshan in Tamil or Kanchi athi varadhar in Tamil or Athi varadhar peruvizha in Tamil.

- Advertisement -