அனைவருக்கும் சுபிட்சங்களை தரும் அத்தி வரதரின் சிறப்பு அலங்கார தரிசனம்

athi-varadhar

சித்தர்கள், ஞானிகள் தவிர்த்து ஏனைய மக்களுக்கு அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியாது. அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்து செயலாற்றுபவர்களுக்கு எந்தவித பயம், கவலை ஏதுமில்லை. ஆன்மீகத்தில் திடமான இறை நம்பிக்கையோடு, பொறுமை குணம் கொண்டு செயல்படுபவர்களுக்கு இறை தரிசனம் நிச்சயம் கிடைக்கும். அப்படி மிகுந்த பொறுமையுடன் வாழும் பக்தர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் அரிய பாக்கியமாக காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் திகழ்கிறது. அந்த அத்தி வரதர் தரிசனம் குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் திருக்குளத்தில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதராஜ பெருமாளின் சிலை வைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது. அந்த வகையில் 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரதராஜப் பெருமாளின் சிலை வெளியில் எடுக்கப்பட்டது

ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி வரை 48 தினங்களுக்கு அத்திவரதர் தரிசன வைபவம் நடைபெறுகிறது. ஒரு மனிதரின் வாழ்வில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே காணக்கூடிய அபூர்வ கோவில் வைபவம் இது என்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர்.

பொதுவாக பௌர்ணமி தினங்களில் அனைத்து கோவில்களிலும் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம் அந்த வகையில் ஆனி பௌர்ணமி தினமான நேற்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடை உடுத்தப்பட்டு, ஏலக்காய் மாலை, தாமரைப்பூ மாலை, செண்பகப்பூ மாலை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு, நைவேதியங்கள் படைக்கப்பட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தருளினார். வரதருக்கு செய்யப்பட்ட இந்த அலங்காரம் மற்றும் பூஜைகளால் பக்தர்களின் வாழ்வில் அனைத்து நன்மைகள் ஏற்படுவதோடு, நாடு சுபிட்சமாடையும் என ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். மேலும் வரவிருக்கின்ற விஷேஷ தினங்களிலும் அத்தி வரதரின் சிறப்பு அலங்காரம் மற்றும் தரிசனம் பக்தர்களுக்கு காணக்கிடைக்கும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே:
காஞ்சி அத்தி வரதர் தரிசன அவசிய தகவல்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kanchi athi varadar in Tamil. It is also called as Athi varadar kovil in Tamil or Kanchi varadaraja perumal kovil in Tamil or Athi varadhar alangaram in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.