நேற்றுடன் முடிந்தது அத்தி வரதர் தரிசனம் – இன்று திருகுளத்திற்குள் வைக்கப்படுகிறார்

athi-varadhar

மிக பழமையான வரலாறு மற்றும் ஆன்மீக சிறப்பு மிக்க கோயில்களை கொண்ட ஒரு நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. அந்த காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாழ்வில் ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பாக இந்த அத்திவரதர் தரிசன வைபவம் இருப்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் அத்திவரதர் தரிசனம் காண காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். மிக சிறப்பு வாய்ந்த இந்த அத்தி வரதர் வைபவம் குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

varadharaja perumal

ஒவ்வொரு முறை அத்திவரதர் தரிசன வைபவத்தின்போது சில நாட்கள் சயன கோலத்திலும் சில நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி தருவது நடைமுறையாக இருக்கிறது அந்த வகையில் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சயனக்கோலம் எனப்படும் படுத்திருந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தந்த அத்திவரதர் பெருமாள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் நின்றகோலத்தில் தரிசனம் தந்த அத்தி வரதரின் பொது மக்களுக்கான தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது.

ஒவ்வொரு முறையும் அனந்த சரஸ் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்படும் அத்திவரதருக்கு 40 நாட்களுக்கு குறையாமல் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் முறை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்தி வரதர் தரிசனத்தின் போது ஒரு மண்டலம் எனும் 48 தினங்களில் 47 தினங்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு, 48 தினம் அத்தி வரதரை சகல மரியாதையுடன் மீண்டும் திருக்குளத்தில் வைக்கின்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த 48 தினங்களில் ஒரு கோடி பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம் மேற்கொண்டதாக சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் தெரிவித்தார்.

வாழ்வில் கிடைக்கின்ற அறிய வாய்ப்பு என்பதால் தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் இருந்து வந்த பக்தர்கள் நெடுநேரம் வரிசையில் நின்று உணவு, தண்ணீர் அருந்துவது பற்றி கவலைப்படாமல் அத்தி வரதர் தரிசனம் செய்தது குறித்து மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். அத்தி வரத தரிசன வைபவத்தின் ஆரம்ப நாட்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எதிர்பாராத அளவிற்கு வந்த பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க சிரமப்பட்டாலும், பின்வரும் நாட்களில் திறமையாக செயல்பட்டு அனைவரும் எந்த ஒரு குறையுமின்றி அத்தி வரதர் தரிசனம் செய்ய வழிவகை செய்தனர். இதற்கு தமிழக முதல்வர், தமிழக காவல்துறை தலைவர் உட்பட பலர் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

- Advertisement -

Athi-Varadar-Kanchi

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்னும் பல லட்சக்கணக்கான மக்கள் அத்தி வரதர் தரிசனம் செய்யாததால் அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். எனினும் இதுகுறித்த முடிவை கோவில் நிர்வாகமும், அறநிலையத் துறையில் மட்டுமே எடுக்க முடியும் எனக் கூறிய நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அறநிலையத் துறை அமைச்சரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்தி வரதரை வைக்கும் மீண்டும் குளத்தில் வைக்கும் பணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

எனவே இது தான் இறுதி வாய்ப்பு என்றெண்ணிய இதுவரை தரிசனம் செய்யாத பக்தர்கள், நேற்றைய தினம் மிக அதிக அளவில் திரண்டு வந்து அத்திவரதர் தரிசனத்திற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து, அத்தி வரதர் தரிசனம் செய்தனர். இரவு வரை பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். நேற்று இரவு அத்திவரதருக்கு இறுதியாக பூஜைகள் செய்யப்பட்டு நடை சாத்தப்பட்டது ஆகஸ்ட் 17 ஆம் தேதியான இன்று அத்தி வரதரை குளத்தில் வைப்பதற்கான சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன. மறுபடியும் அத்தி வரதராஜரை காண 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே என்கிற ஏக்கம் அனைத்து பக்தர்களுக்குமே ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:
உத்திரம் நட்சத்திர அதிர்ஷ்ட பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar festival ending in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar kovil in Tamil or Athi varadhar vizha in Tamil.